எம்எல்ஏ சார்.. நீங்க யாரா வேணும்னாலும் இருங்க.. செந்தில் பாலாஜியை பார்க்க அனுமதி மறுத்த சிஆர்பிஎப்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுமதிக்க வேண்டும் என்று கேட்ட திமுக எம்எல்ஏக்களிடம் நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். எங்களுக்கு உங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆர்டர் இருந்தால் தான் அனுமதிப்போம் என துணை ராணுப்படையினர் மறுத்துவிட்டனர்
இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பபட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுததால் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளும் வெளியானது. இதனிடையே செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை கேட்டு, திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு. ரகுபதி, மா சுப்பிரமணியன், சேகர்பாபு உள்பட திமுகவினர் பலரும் ஓமந்தூரார் மருத்துவனைக்கு விரைந்து வந்து நலம் விசாரித்தார்கள்.

முதல்வர் முக ஸ்டாலினே நேரடியாக சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து மருத்துவமனையில் விசாரித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறை முழுவதும் மத்திய துணை ராணுவப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவரை பார்க்க திமுக எம்எல்ஏக்கள் பலரும் வந்த வண்ணம் உள்ளனர். திமுக அமைச்சர்கள் பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.
அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலரை தவிர யாரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க துணை ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. செந்தில் பாலாஜியை பார்க்க எம்எல்ஏக்கள் பரந்தாமன், இனிகோ இருதயராஜ் மற்றும் திமுகவினர் சிலரும் வந்தார்கள். அப்போது லிப்ட் அருகில் இருந்த துணை ராணுப்படை அதிகாரி, அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்று அனுமதி மறுத்தனர்.
எனினும் தொடர்ந்து எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தபடி இருந்தனர். ஆனால் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து எம்எல்ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அனுமதிக்கும்படி கேட்டபடியே இருந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் இறுதியாக யாரையும் அனுமதிக்ககூடாது என்று சொல்லிவிட்டார்கள். யாருக்கும் அனுமதி இல்லை. யாரையும் உள்ளே விட எனக்கு அனுமதி இல்லை என்று துணை ராணுவப்படை அதிகாரி கூறினார்.
அப்போது எம்எல்ஏ பரந்தாமன், தான் எம்எல்ஏ என்று கூறினார், அப்போது அங்கிருந்து துணை ராணுவப்படை அதிகாரி, நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். எங்களுக்கு உங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆர்டர் இருந்தால் தான் அனுமதிப்போம் என்றார். இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க முடியாமல் அவர்கள் திரும்பி சென்றார்கள்
இதனிடைய அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். தற்போது சிகிச்சையில் செந்தில் பாலாஜி இருப்பதால் இனி கைதியாகவே சிகிச்சையை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு உடனடியாக மனுதாக்கலும் செய்துள்ளார். இந்த ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications