‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ : ஒரு மாத ஊதியத்தை அப்படியே முதல்வரிடம் வழங்கிய திமுக எம்.எல்.ஏக்கள்!
சென்னை : பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்துக்கு அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.
முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து, அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
சமீபத்தில், இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, தனது சார்பாக ரூ. 5 லட்சம் நிதியையும் வழங்கினார். மேலும், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடவும் கோரிக்கை விடுத்தார்.

நம்ம ஸ்கூல் திட்டம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல்' பவுண்டேஷன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அனைவரின் பங்களிப்புடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிகரான பள்ளியாக உயர்த்துவதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சி.எஸ்.ஆர் நிதியை கொண்டு அரசுப் பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் முதல் நபராக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை வழங்கினார்.

நிதி உதவி
முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைகயை ஏற்று, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், நிறுவனங்களும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை அப்படியே முழுமையாக 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்திற்காக வழங்கியுள்ளனர். இந்த காசோலைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அரசு கொறடா கோவி.செழியன் ஆகியோர் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்.

எம்.எல்.ஏக்கள் வழங்கிய 1.29 கோடி
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' திட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தங்களது ஒருமாத ஊதிய தொகையான ஒரு கோடியே 29 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் வழங்கினர். அதேபோன்று, பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் நிதி வழங்கினர்.

பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்களும்
மேலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோரும் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, எம். பூமிநாதன், டாக்டர் டி.சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications