அண்ணா அறிவாலயத்தில்.. நடந்து முடிந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்.. என்ன ஆலோசிக்கப்பட்டது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று, ஆட்சி அமைத்துள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த மே 7ஆம் தேதி ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது.

DMK MLAs meeting held in Chennai anna arivalayam

இந்நிலையில், தமிழ்நாட்டின் 16ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த உரையில் தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளும் இரு வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர்,

சட்டசபை கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மாதம்தோறும் தங்கள் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+