பச்சை துண்டு அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள்.. முதல்வர், துணை முதல்வர் மற்றும் சீனியர்கள் மிஸ்ஸிங்!
சென்னை: இன்று வேளாண் பட்ஜெட் தாக்கலையொட்டி, திமுக எம்.எல்.ஏக்கள் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி ஆகிய சிலரை தவிர மற்ற திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பச்சைத் துண்டு அணிந்து வந்திருந்தார்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி யாகிய சிலரை தவிர மற்ற திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்துள்ளனர்.
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேளாண் துறையுடன் கால்நடைத் துறை, மீன்வளத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களில் மரியாதை செலுத்தினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications