மனப்பிறழ்வில் தவிக்கிறார் முதல்வர் எடப்பாடி... முரசொலி விமர்சனம்
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை மாற்று முதல்வர் வந்துவிடுவாரோ என்ற மனப்பிறழ்வில் தவிப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக இன்று வெளியாகியுள்ள முரசொலி நாளிதழ் தலையங்கத்தில், திமுக ஆட்சிக்காலங்களில் கட்டப்பட்ட அணைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன. 1967-ம் ஆண்டு கட்டப்பட்ட தும்பலஹள்ளி அணை தொடங்கி 2011-ல் கட்டப்பட்ட ஆனைவிழுந்தான் ஓடை அணை வரை பட்டியலிட்டு விவரிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக முதலமைச்சருக்கு பதில் தரும் வகையில் டி.ஆர்.பாலுவும், துரைமுருகனும் அறிக்கை மேல் அறிக்கை விட்ட நிலையில் இன்று கட்சி நாளிதழிலும் முதலமைச்சருக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனி மற்றும் ஞ்சாயிற்றுக்கிழமைகளில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீர் நிலைகளை பாதுகாக்க திமுக என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு திமுக தரப்பில் இருந்து தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பதிலடி தரப்பட்டுள்ளது.


மேலும், சென்னையை தாண்டினால் சேலம், சேலத்தை தாண்டினால் சென்னை என்று வாழ்ந்து வரும் முதல்வருக்கு திமுக கட்டிய தடுப்பணைகளை பற்றி எப்படி தெரிந்திருக்கக்கூடும் என வினவப்பட்டுள்ளது. பதவியை தக்கவைக்க தூக்கமில்லாமல் முதல்வர் தவித்து வருவதாகவும், எந்த அமைச்சரும் தம்மை மதிப்பதில்லை என்பதை நினைத்து முதல்வர் மனம் வெம்பி உள்ளதாகவும் முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பேச்சுக்கள் தூக்கத்தில் பிதற்றுபவரை போல் உள்ளதாகவும், அவர் பேசாமல் இருப்பதே நல்லது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையை மட்டும் யாருக்கும் கொடுக்காமல் பொத்திப்பொத்தி பாதுகாக்கும் முதல்வருக்கு அந்த துறையை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை என முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
-
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications