சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தபால் வாக்குகளுக்கு அனுமதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் விவரத்தை தொகுதி வாரியாக வழங்க கோரி திமுக வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: தபால் வாக்குகள் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பட்டியலை தொகுதி வாரியாக வழங்க வேண்டும் என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளன.

DMK moves HC on Postal ballots for elderly and disabled

இந்த நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்களின் தொகுதி வாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக எம் எல் ஏ-வும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திருமண நிகழ்ச்சி- உற்சாக வரவேற்பு- எடப்பாடி கோட்டையில் வெள்ளோட்டம் பார்க்கிறாரா ஓபிஎஸ்?திருமண நிகழ்ச்சி- உற்சாக வரவேற்பு- எடப்பாடி கோட்டையில் வெள்ளோட்டம் பார்க்கிறாரா ஓபிஎஸ்?

அந்த மனுவில், தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு வசதியை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.

அதன் அடிப்படையில், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டியலை வழங்கக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு அனுப்பியும் பதில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK MLA KN Nehru moves the Madras High Court on Postal ballots for elderly and disabled issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X