விஸ்வரூபம் எடுத்த மாட்டு சிறுநீர் பேச்சு.. மன்னிப்பு கேட்டார் திமுக எம்பி செந்தில்குமார்!
சென்னை: மாட்டு சிறுநீர் குடிக்கும் மாநிலங்களில்தான் பாரதிய ஜனதா கட்சி ஜெயிக்கும் (பாஜக) என்ற தமது பேச்சுக்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் லோக்சபாவில் பேசிய திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக ஜெயிப்பதுதான் பலம். நாங்கள் இந்தி பேசும் மாநிலங்களை Gau Mutra (மாட்டு சிறுநீர் குடிக்கும் மாநிலங்கள்) என்றுதான் அழைப்போம் என கூறினார்.

திமுக எம்பி டாக்டர் செந்தில்குமாரின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் டாக்டர் செந்தில் குமார் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தமது பேச்சுக்கு திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் வருத்தமும் மன்னிப்பும் கேட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.
எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,
முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன்.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 5, 2023
எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை,
அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் செந்தில் குமார் எம்பி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதேபோல மாட்டு சிறுநீர் என்கிற வார்த்தையை பயன்படுத்தி டாக்டர் செந்தில் குமார் சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications