டெல்லி எரிகிறது.. ரஜினி எங்கே.. தொப்பி போடாத முஸ்லீம் ராமதாஸ் எங்கே.. எம்பி செந்தில்குமார் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "டெல்லி எரிகிறது.. இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிறார்கள்.. இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆள் ஆக வீதிக்கு வருவேன் சொன்ன ரஜினிகாந்த் எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் டாக்டர் ராமதாஸ் எங்கே? இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே? என்று கேட்டு திமுக எம்பி செந்தில்குமார் காரசாரமான ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    டெல்லி கலவரம்.. ரஜினிகாந்த் திடீர் கோபாவேசம்

    சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்றார். மேலும், இந்திய முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், 10 நாட்களுக்கு முன்பு திடீரென வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் போலீசாரால் தாக்கப்பட்டனர்.. இதுகுறித்து திமுக எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

    வைரல்

    வைரல்

    இது சோஷியல் மீடியாவில் கடும் வைரலானது.. குறிப்பாக ரஜினிக்கு எதிரான கேள்வியை கேட்டு அவரை சாடி, விமர்சித்திருந்தார்.. "சொன்னது நீ தானா, சொல் சொல். எங்க ரஜினிகாந்தை ஆள காணோம். கேட்டை திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே கேட்டை முடித்து வைக்கவும் தயங்காது" என்ற அவரது பதிவு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.. கடும் அதிர்வலைகளையும் உண்டுபண்ணியது.

    ராமதாஸ்

    ராமதாஸ்

    இப்போது டெல்லியில் வன்முறை தலைதூக்கி உள்ளது... இது குறித்து ட்வீட் போட்டுள்ள செந்தில்குமார், திரும்பவும் ரஜினியை வம்பிழுத்துள்ளார்.. ரஜினி மட்டுமில்லை.. முதல்வர் முதல் ராமதாஸ் வரை எல்லாரையுமே கேள்வி கேட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "டெல்லி ஏரிகிறது இஸ்லாமியர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்படுகிரர்கள்...இஸ்லாமியர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆள் ஆக வீதிக்கு வருவேன் சொன்ன ரஜினிகாந்த் எங்கே? தொப்பி போடாத இஸ்லாமியர் டாக்டர் ராமதாஸ் எங்கே? இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று சொன்ன முதலமைச்சர் எடப்பாடி எங்கே? என்று காரசாரமாக உள்ளது அந்த ட்வீட்.

    முஸ்லீம் சகோதர்கள்

    முஸ்லீம் சகோதர்கள்

    செந்தில்குமார் போட்ட இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. "டெல்லி கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டை இழந்து வருகிறது.. சரி செய்ய வேண்டிய அரசு இயந்திரம் தான் எங்கே என தெரியவில்லை" என்று ஒருவர் பதிலளித்துள்ளார். அதேபோல, "அன்றே சொன்னேன் முரசொலி படிச்சு டாக்டர் ஆனால் இப்பிடி தான் யோசிக்க தோணும். குடியுரிமை சட்டத்தால் இங்கு இருக்கும் முஸ்லீம் சகோதர்கள் வெளியேற்ற பட்டால் போராடுவேன்னு ரஜினி சொன்னார் ஆனால் புரியாத மாதிரி நடிப்பு.. இதை எதிர்த்து 38 MPக்கள் ஏன் இன்னும் ராஜினாமா பண்ணல? அவ்வளவு பதவி ஆசையா??" என்று இன்னொருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    பதிலடிகள்

    மற்றொருவரோ, "ரஜினியை வம்புக்கு இழுக்க காரணம் என்ன? இந்த CAA சட்டத்தால் யாரும் பாதிப்பில்லை , பாதிக்கப்பட்டால் போராடுவேன் என்றார்... அந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டால் சொல்லுங்க, போராடுவார்" என்று பதிலடிகள் விழுந்த வண்ணம் உள்ளன. இதனால் எம்பி செந்தில்குமாரின் ட்வீட் படு ஹாட்டாக உள்ளது. பலரும் அவரது ட்வீட்களை ஷேர் செய்தவண்ணம் உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+