திமுக எம்பி ஜெகத்ரட்சகன், குடும்பத்துக்கு 908 கோடி ரூபாய் அபராதம்.. அமலாக்கத்துறை அதிரடியின் பின்னணி
சென்னை: ரிசர்வ் வங்கி ஒப்புதலை பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியதாக புகாரில், அந்நிய செலாவணி மேலாண் சட்டத்தின் கீழ் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரக்கோணம் தொகுதி எம்பியான திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியல்வாதியாக உள்ளார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பல தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, கல்லூரி கட்டிக்கொள்ளும் அனுமதியைப் பெற்றார். 1984ல் பாரத் பொறியியல் கல்லூரியைத் துவங்கிய ஜெகத்ரட்சகன், அந்த கல்லூரியை புகழ் பெற்ற கல்லூரியாக உயர்த்தினார். 2002ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக மாறியது.

அதன்பிறகு 2004ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரி, 2007ஆம் ஆண்டில் புதுச்சேரியில் ஸ்ரீ இலட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம், 2002ல் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 2007ல் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்கினார். அரசியலை பொறுத்த வரை ஜெகத்ரட்சகன் திமுகவின் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவர் ஆவார். அரக்கோணம் தொகுதியில் 2019ம் ஆண்டு வெற்றி பெற்றவர், 2024 தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். 2009ம் ஆண்டு காலக்கட்டத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
திமுகவில் பணபலம்மிக்க தலைவராக பார்க்கப்படும் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக கடந்த 2020ல் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது நடந்த விவகாரம் தொடர்பாக இந்நிலையில் வருமான வரித்துறை கொடுத்த தகவலின்படி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளது தொடர்பாக 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தது.
இந்நிலையில் ஜெகத்ரட்சகனின் வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு அக்டோபரில் மீண்டும் சோதனை நடத்தினர். இந்தசோதனையில் ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி சென்றது வருமான வரித்துறை. .
இது ஒருபுறம் எனில் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சில்வர் பார்க் என்ற தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை திமுக எம்பி-யான ஜெகத்ரட்சகன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூனில் ரூ. 32.69 கோடி மதிப்பில் வாங்கினார் என்றும், இதில் 45 லட்சம் பங்குகளை தனது மனைவி அனுசுயா பெயருக்கும், 22.5 லட்சம் பங்குகளை மகள் ஸ்ரீநிஷா பெயருக்கும், 2.5 லட்சம் பங்குகளை மகன் சந்தீப் ஆனந்த் பெயருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாற்றியுள்ளார் என்றும் புகார் எழுந்தது. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதனிடையே ரிசர்வ் வங்கி ஒப்புதலை பெறாமல் வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்கியதாக புகாரில், அந்நிய செலாவணி மேலாண் சட்டத்தின் கீழ் ஜெகத்ரட்சகன் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனத்தினடம், ஃபெமாவின் கீழ் சென்னை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரணை நடத்தி வந்தது. ஃபெமாவின் பிரிவு 37A இன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையின் காரணமாக 11.09.2020ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் சொத்துக்கள் பறிமுதல் செய்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இருந்த பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 89.19 கோடியாகும்.
இதனிடையே கடந்த 01.12.2021 அன்று, ஃபெமாவின் 16 வது பிரிவின்படி, ஜெகத்ரட்சகன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு எதிராகவும், குறிப்பாக அவர்கள் செய்திருந்த முதலீடுகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டன. இதில் ஃபெமாவின் பல்வேறு விதிகளை மீறியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டது.
இதன்படி 2017 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் இணைக்கப்பட்ட ஒரு ஷெல் நிறுவனத்தில் 42 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஃபெமாவின் தற்போதைய விதிகளை மீறி குடும்ப உறுப்பினர்களிடையே அதில் பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சுமார் ரூ. 9 கோடிக்கு இலங்கை நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே 11.09.2020ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் கீழ் கைப்பற்றப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று புகார் வந்தது.
இந்த புகார்களை விசாரித்த அமலாக்கத்துறை. 22.12.2021 அன்று நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் அவர்களது வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கொண்டு விளக்கம் அளித்தனர். இந்த நோட்டீஸ்க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநபர் ரிட் மனுவை தாக்கல் செய்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட் தனி நீதிபதி அமர்வு 30.11.2023 தேதியிட்ட உத்தரவில், சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதனை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, 23.07.2024 தேதியிட்ட ரிட் மேல்முறையீட்டு உத்தரவையும் தள்ளுபடி செய்தது.
இதன் விளைவாக, பெமாவின் கீழ் தீர்ப்பு நடைமுறைகள் உரிய சட்ட நடைமுறைக்குப் பிறகு தற்போது முடிக்கப்பட்டுள்ளன. நோட்டீஸ்களில் குறிப்பிடப்பட்ட மீறல்களை கவனமாக ஆய்வு செய்ததில், சட்ட மீறல்கள் தெளிவாக நிரூபிக்கப்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. எனவேகுற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு மீறலுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. ஃபெமாவின் 37A பிரிவின்படி கைப்பற்றப்பட்ட ரூ.89.19 கோடி பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் 26/08/2024 அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ரூ.908 கோடி (தோராயமாக) அபராதம் விதிக்கப்படுகிறது" இவ்வாறு அமலாக்கத்துறை கூறியுள்ளது.
அமலாக்கத்துறை நோட்டீஸ்: அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு ஜெகத்ரட்சகனுக்கு அனுப்பிய நோட்டீஸில், சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சில்வர் பார்க் என்ற தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை திமுக எம்பி-யான ஜெகத்ரட்சகன் கடந்த 2017-ம் ஆண்டு ஜூனில் ரூ. 32.69 கோடி மதிப்பில் வாங்கி இருக்கிறார். இதில் 45 லட்சம் பங்குகளை தனது மனைவி அனுசுயா பெயருக்கும், 22.5 லட்சம் பங்குகளை மகள் ஸ்ரீநிஷா பெயருக்கும், 2.5 லட்சம் பங்குகளை மகன் சந்தீப் ஆனந்த் பெயருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெகத்ரட்சகன்மாற்றி உள்ளார். ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். இந்த நோட்டீசுக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த காரணத்தால், அமலாக்கத்துறை சட்ட நடவடிக்கை தற்போது எடுத்துள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications