ஆஃப்கன் -பர்மா -ஸ்ரீலங்கா -உணவு வகைகள் நம்ம சென்னையில்! இன்னைக்கு ஒரு புடி! ருசி பார்த்த கனிமொழி!
சென்னை: சென்னை செம்மொழிப் பூங்காவில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் இரண்டு நாள் உணவு திருவிழாவை தொடங்கி வைத்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, அங்கேயே உணவுகளை ருசியும் பார்த்தார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், மியான்மார் (பர்மா) நாட்டு உணவு பண்டங்கள் சைவம் அசைவம் என இரண்டு வகைகளாக இந்த உணவுத் திருவிழாவில் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக இலங்கை ஸ்பெஷலான தொதல் என்ற இனிப்பு பலகாரம் உணவுத் திருவிழா வந்திருந்தவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில் 'ஊரும் உணவும்' என்ற பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் இரண்டு நாள் உணவு திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த உணவு திருவிழாவில் ஸ்டால் அமைத்து பங்கேற்க விரும்புவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் . இன்றும் நாளையும் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள போதும், ஃபுட் லவ்வர்ஸ் கொடுக்கும் வரவேற்பு அதிகமாயிருப்பின் இது இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்புதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உணவுத் திருவிழாவில் கலந்துகொள்ள விரும்புவோர் 9176483735 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இந்த உணவு திருவிழாவுக்கு நுழைவு கட்டணம் கிடையாது என்பதும் அனுமதி இலவசம் என்பதும் கவனிக்கத்தக்கது.
உணவு திருவிழாவில், அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications