ஆண்களை மறுக்கும் உரிமை பெண்களுக்கு இல்லையா? சிவகார்த்திகேயன் படத்தை கடுமையாக விமர்சித்த கனிமொழி!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் காதலிக்கும் ஆண்களை மறுக்கும் உரிமையை கூட பெண்களுக்கு இல்லை என்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். அதேபோல் 40% அதிகமான பெண்கள் சாதாரணமாக வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் சென்னை இலக்கிய திருவிழாவில்,"தமிழ் சமூகத்தில் பெண்ணியம்" என்ற தலைப்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி பேசுகையில், வரலாற்றில் பெண்களுக்கான உரிமை மறுக்கப்படவில்லை. ஒரு கால கட்டங்களில் பல்வேறு அவ்வையார்கள் சமூகத்தில் இருந்திருக்கிறார்கள். பெண்கள், வரலாற்றில் அரசு பணிகளில் வைத்து போற்றப்பட்டார்கள். ஆனால் அதே காலகட்டத்தில்தான் பெண்களுக்கு விதவை கோலம் இட்டு இகழ்ந்து வந்தார்கள்.

கனிமொழி பேச்சு
அதேபோல் கண்ணகி ஒரு அரசனை எதிர்த்து நியாயம் கேட்டார். தற்போது எதிர்த்து கேள்வி கேட்பவர்களின் நிலை என்ன என்பது குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு நன்றாக தெரியும். சமகாலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூறும்போது அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். பெரும்பான்மையான பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

குடும்ப வன்முறை
இது கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகபடியாக காணப்பட்டது. நரேந்திர மோடி பீடங்களில் மட்டுமே பெண்களை ஏற்றி வைத்துள்ளார். அதேபோல் தமிழ்ச் சமூகம் பெண்களுக்கு முக்கியத்துவம் தந்த சமூக என அன்றாடம் பெருமையாக பேசுகிறோம். அதே நேரம், பெண்கள் எந்தளவுக்கு அவமரியாதையாக நடத்தப்படுகிறார்கள் என்பதை பற்றியும் பேச வேண்டியுள்ளது. இந்த இரண்டு எல்லைகளுக்கு இடையே தான் பெண்களின் உரிமை பற்றி பேச வேண்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 40 சதவிகிதத்திற்கும் மேலாக பெண்களுக்கு எதிரான வன்முறை மிக சாதாரணமாக நடக்கிறது.

ரெமோ படம் மீது விமர்சனம்
தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும் பெண்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் 2016ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ என்ற திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். பெண்ணின் மீது அதிக அன்பு கொண்டதன் காரணமாகவே பெண்ணின் மீது ஆசிட் வீசப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கும். இது ஒரு தவறான முன்னுதாரணம்.

ஆணை மறுக்கும் உரிமை?
ஏனென்றால் அங்கு ஒரு ஆணை மறுப்பதற்கான உரிமை அந்த பெண்ணிற்கு கிடையாது. அப்படிதான் நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்தக் கூடிய வகையிலான திரைப்படங்கள் வருகிறது. பெண் என்பவள் உடல், கற்பு என்ற வட்டத்திற்குள் அடக்கும் நாயகர்களை திரைப்படங்கள் காட்சிப்படுத்துகின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிரான ஒரு மசோதா கொண்டு வந்த பொழுது ஒன்றிய அரசு யாரிடத்திலும் ஆலோசனை கேட்டுப் பெறவில்லை. ஆனால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்ட போது அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை கேட்கப்படுவதாக கூறி ஏமாற்றி வருகிறது.

பெரியாரின் கருத்துகள்
பெண்ணியம் பேசக்கூடிய பெண்களையே மிரளச்செய்யும் அளவிற்கான கருத்துகள் பெரியாரின் கருத்துக்கள். பெரியாரின் வழிவந்த நாம் பெண்களை மதித்து வருகிறோம். பெண்களை நாம் நடத்தக்கூடிய விதம் என்பது சமூக மாற்றத்தின் மூலமாக மட்டுமே நிறைவேறும். அதன்படி சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும் என்று தெரிவித்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications