Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த திமுக எம்பி கனிமொழி "வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே" என்று கூறியுள்ளார்.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை ஆண்டுதோறும் தலித் வரலாற்று மாதமாக நீலம் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. இந்த ஏப்ரல் மாதத்தில் 'வானம் கலைத் திருவிழாவை' நீலம் மையம் ஒருங்கிணைத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஏப்ரல் மாதம் இந்த திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் திருவிழா நடத்தப்பட்டிருக்கிறது.

DMK MP Kanimozhi participates as guest in Vaanam kalai thiruvila organized by Neelam Cultural Center

சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த ஏப்.5ம் தேதி தலித் வரலாற்று மாத கண்காட்சியுடன் இத்திருவிழா தொடங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழாவை சென்னை பிரசாத் லேபில் ஏப்.8ம் தேதி இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து திரைக்கதையாசிரியர் ஜா.தீபா அவர்கள் தொகுத்த 'சமூக சிந்தனை' எனும் தலைப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் P.S.வினோத்ராஜ், இயக்குநர் கௌதம்ராஜ் ஆகியோருடன் கலந்துரையாடல் நடந்தது. இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் "திரைத்துறையில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் வருகைக்குப் பிறகு மிக எளிதாக சமூக சிந்தனை கொண்ட திரைப்படம் எடுப்பதற்கு வழிவகுத்தது" என்று பாராட்டினார்.இதனைத் தொடர்ந்து இயக்குனர் அதியன் ஆதிரை, இயக்குனர் பா. இரஞ்சித், கலை இயக்குனர் இராமலிங்கம், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர் தமிழ் பிரபா ஆகியோருடன் கலந்துரையாடல் நடந்தது.

கடைசி நாளான ஏப்.10ம் தேதி நிகழ்வில் 'மாமன்னன்' படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குனர், கலை இயக்குனர், படத்தொகுப்பாளர், சவுண்ட் டிசைனர் அனைவரும் பார்வையாளர்களோடு கலந்துரையாடினர். இதனை தொடர்ந்து 'டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நவ் & தென்' ஆவணப்படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குநர், எழுத்தாளர் ஜோதி நிஷா கலந்துரையாடினார். இயக்குநர் ரிந்து தாமஸ் மற்றும் சுஷித் கோஷ் ஆகியோர்கள் இயக்கிய 'ரைட்டிங் வித் ஃபயர்' ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 'தலித் சினிமா' எனும் தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் இளம்மருது தொகுத்து வழங்க இயக்குநர்கள் பா. இரஞ்சித், ஜெயகுமார், டாக்டர் பிஜு தாமோதரன் ஆகியோர்கள் கலந்துரையாடினர். இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில் "சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப் பட்டவர்கள் என இரண்டு வகையாக இருப்பதை நாம் உணர வேண்டும். என்னை எதிர்ப்பதற்காக எடுக்கப்படும் படங்கள் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை" என்று விமர்சித்திருந்தார்.

இதனையடுத்து ஏப்.24 முதல் ஏப்.30 வரை கலையும் அழகியலும் ஓவிய கண்காட்சி நடைபெறுகிறது. இடையில் ஏப்.27 மற்றும் 28ம் தேதி தலித் வேர்சொல் இலக்கிய கூடுகை போன்ற நிகழ்வுகள் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற வானம் கலை விழா - வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி பங்கேற்றிருந்தார். இதில் சிறப்புரையாற்றிய அவர், "வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே. நாம் கலைகள் வழியாக இங்கு வெறுப்பு சிந்தனைகளுக்கு மாற்றாக அன்பையும் , சமத்துவத்தையும் தொடர்ந்து பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் , தொடர்ந்து பேசுவோம்" என்று பேசியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+