சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது அநியாயம்.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் மத்திய அரசு உதவித்தொகை தேர்வு.. பொங்கி எழுந்த கனிமொழி

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் உதவி தொகை தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுவதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தேசிய மொழி என்று ஒரு மொழி இல்லை. அதற்குப் பதிலாக அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக மட்டுமே இந்தியும் ஆங்கிலமும் உள்ளது.

இதைத் தாண்டி எட்டாவது அட்டவணையில் தமிழ், பெங்காலி, குஜராத்தி, இந்தி, தெலுங்கு, உருது உள்ளிட்ட 22 மொழிகள் இடம் பெற்று உள்ளன.

ஜெர்மனியில் ராஜாத்தி அம்மாள்! சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள்! கவனமாக பார்த்துக்கொள்ளும் கனிமொழி!ஜெர்மனியில் ராஜாத்தி அம்மாள்! சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள்! கவனமாக பார்த்துக்கொள்ளும் கனிமொழி!

இந்தியா

இந்தியா

இந்த 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மத்திய அரசு இதுவரை அந்த கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. அதேநேரம் இந்தியை நாடு முழுவதும் திணிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளதாகத் திராவிட கட்சிகள் தொடர்ந்து சாடி வருகிறது.

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் தபால், ரயில்வே, வங்கி உள்ளிட்ட பணியிடங்களுக்குக் கூட வடமாநிலங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. மேலும், தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளும் கூட இந்தி தெரிந்தவர்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் இருப்பதாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

 உதவித் தொகை தேர்வு

உதவித் தொகை தேர்வு

இப்போது மீண்டும் அதேபோன்ற புகார் கிளம்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் மேல்நிலை வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூக பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு உதவித் தொகைக்கான தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும், அந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனிமொழி

கனிமொழி

இதில் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டால், அது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உதவுவதாக அமையும். இந்நிலையில், இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வு நடத்தி சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

 ஆங்கிலம், இந்தி

ஆங்கிலம், இந்தி

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூக பள்ளி மாணவ/ மாணவியர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காகத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது.

 சமூக நிதி

சமூக நிதி

பல்வேறு மொழிகளின் பிறப்பிடமான இந்தியாவில், இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் ஒன்றிய அரசு இந்த பாரபட்சமான முறையை விடுத்து அரசமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் பட்டியிலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வு நடத்தி சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

English summary
DMK MP Kanimozhi about scholarships exams to young students of OBC, EBC, and DNT communities: 22 languages listed in the 8th Schedule of the Constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X