உங்களை பத்தி சொல்லுங்க.. கேள்வி கேட்ட ஸ்டாலின்.. இண்டர்வியுவிற்கு வந்த கனிமொழி.. நடந்தது என்ன?
சென்னை: திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் இன்று வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த நேர்காணலை நடத்தினர்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்!

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
நேற்றுதான் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.
லோக்சபா தேர்தல் 2024ல் கூட்டணி வைப்பதற்கு திமுகவிடம் முக்கியமான சில கோரிக்கைகளை விசிக கட்சி வைத்து வந்தது. அதன்படி இந்த முறை 3 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் விசிக கேட்டதாக கூறப்படுகிறது.
திமுகவிடம் 3ல் 1 தனி தொகுதி, 2 பொதுத்தொகுதி வேண்டும் என்றும் விசிக கேட்டதாக கூறப்படுகிறது. அதோடு 3லும் பானை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சி கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 2 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது.
2 தனித்தொகுதிகளில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று விசிகஅறிவித்துள்ளது . அதே சமயம் சின்னம் தொடர்பான விவாதத்திலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று விசிக சொன்னதை திமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மதிமுக கூட்டணி: இது போக திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது . லோக்சபா தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று வைகோ அறிவித்துள்ளார். ஆனால் ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
நேர்காணல்: கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில், திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தவர்கள் இன்று வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த நேர்காணலை நடத்தினர்.

திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் நேர்காணலில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் அவரிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
உங்கள் தொகுதியில் நீங்கள் செய்தது என்ன? உங்களை பற்றி சொல்லுங்க.. உங்களுக்கு ஏன் மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முறையான கேள்விகளை ஸ்டாலின் கனிமொழியிடம் வைத்தார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யாத நிலையில் தூத்துக்குடிக்கு மீண்டும் கனிமொழியை தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications