சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 புள்ளிகள்.. 2 வீட்டை வாடகைக்கு பிடித்த கனிமொழி.. கூடும் மக்கள்.. பொறாமையை தூண்டும் தூத்துக்குடி

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை கனிமொழி தூத்துக்குடியில் செயல்படுத்தி வருகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: "என்னாச்சு கனிமொழிக்கு? ஏன் தூத்துக்குடியை விட்டு வெளியே வர மாட்டேங்குறாங்க?" என்று தென்மண்டலவாசிகள் கேள்விகள் கேட்கும் அளவுக்கு தூத்துக்குடியிலேயே முகாமிட்டு 15 நாட்களாகவே பம்பரம் போல சுற்றி சுழன்று கொரோனா தடுப்பு பணிகளை நேரடியாகவே கண்காணித்து வருவதுதான்..!

சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார்..

இதோடு நிறுத்திக்கோங்க.. நான் அப்படியா சொன்னேன்.. பாலியல் சீண்டலை மறுத்த கவுரி கிஷன்! இதோடு நிறுத்திக்கோங்க.. நான் அப்படியா சொன்னேன்.. பாலியல் சீண்டலை மறுத்த கவுரி கிஷன்!

அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வுகளை கையில் எடுத்துள்ளார்.

மக்கள்

மக்கள்

இதற்காகவே 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறாராம் கனிமொழி.. ஒன்று வீடு, இன்னொன்று ஆபீசாக மாற்றியுள்ளார்.. அதனால், அந்த வீட்டில் காலை முதல் இரவு வரை எந்நேரமும் மக்கள் கோரிக்கையுடன் காத்து கிடக்கிறார்கள்.. யார் யார் எந்த கிராமம் என்றெல்லாம் பார்க்காமல், அனைவரின் கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்ந்து வருகிறது.

கிராமம், கிராமமாக செல்கிறார்.. வீடு வீடாக செல்கிறார்.. இதனால், ஏராளமான இளம் பெண்கள், முதியோர்களை சந்தித்து, தொற்றில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது, தடுப்பூசியினால் என்னென்ன நன்மைகள், என்றெல்லாம் பொறுமையாக எடுத்து கூறுகிறார்..

அதுமட்டுமல்ல, தொற்று பாதிப்பையும் தாண்டி, உடம்பில் உள்ள வேறு உடல்நலப்பிரச்சனைகள் குறித்தும் அக்கறையோடு விசாரித்து மெடிக்கல் டீமை வைத்து டெஸ்ட் செய்ய வைக்கிறார்.. தங்களின் உடன்பிறந்த சகோதரிபோல, பெற்ற மகளை போல, இப்படி எடுத்து சொல்லும் கனிமொழியின் வார்த்தைகளை கேட்டு, கிராம மக்கள் அதன்படியே நடக்க துவங்கிவிட்டனர்.

 சந்தோஷம்

சந்தோஷம்

இப்போது கனிமொழி தொகுதியிலேயே தங்கியிருப்பதால், அந்த மாவட்ட மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் உடனுக்குடன் வந்து சேர்ந்துவிடுவது கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறது.. கனிமொழி இப்படி தீவிரமாக களமிறங்கி உள்ளதால், அந்த மாவட்ட அமைச்சர் கீதாஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் ஆளுக்கு ஒரு பக்கம் போட்டி போட்டுக் கொண்டு அனைத்து அதிகாரிகளையும் விரட்டி, மக்கள் பணியை செய்ய வைத்து கொண்டிருக்கிறார்கள்.

 அரசு எந்திரம்

அரசு எந்திரம்

ஆக மொத்தம், இந்த 3 முக்கிய புள்ளிகள் தூத்துக்குடியையே நாளெல்லாம் சுற்றி சுற்றி வந்து வேலை பார்ப்பதால், அரசு எந்திரமும் 24 மணி நேரமும் இயங்குகிறது, பொதுமக்களும் மனதிருப்தியில் காணப்படுகின்றனர். இப்படி ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு வேறு மாவட்டங்களுக்கு கிடைக்கவில்லை.. பொதுமக்களின் குறைகளை கேட்கும் விதத்தை பார்த்து, அதிகாரிகளும் கனிமொழியை போலவே, மக்களிடம் அணுகும் முறைகளில் மாற்றத்தை காட்டி வருகின்றனர்..

கனிமொழி

கனிமொழி

சில நாட்களுக்கு முன்பு, ஸ்டெர்லைட் ஆலை திறக்க, திமுகவும் ஒப்புக் கொண்டது.. இதற்கான ஒப்புதலை அனைத்து கட்சி கூட்டத்தில் சென்று தந்துவிட்டு வந்தது கனிமொழிதான்.. இந்த கோபம் தூத்துக்குடியில் ஒருசாராருக்கு இருந்தது.. ஆனால், பெரிய குடும்பத்து பெண், கருணாநிதியின் மகள் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல், எளிய மக்களின் பெண்ணாகவே வலம் வந்து கொண்டிருப்பதை பார்த்து, கொஞ்சம் நஞ்சம் இருந்த கோபமும் போயே போச்சு..!

English summary
DMK MP Kanimozhis innovative work in Thoothukudi district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X