அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் திமுக எம்.பி கதிர் ஆனந்த்! ரூ.14 கோடி சிக்கியது தொடர்பாக விசாரணை
சென்னை: திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான வீடு, கல்லூரியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், இன்று, கதிர் ஆனந்த் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி எம்.பியுமான கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஜனவரி 3 ஆம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 44 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது.

கதிர் ஆனந்தின் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ரொக்கப் பணத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரத்துடன் வந்து பணத்தை எண்ணி, வேனில் கொண்டு சென்று வங்கி கிளைக்கு கொண்டு சென்று அமலாக்கத்துறையின் கணக்கில் வரவு வைத்தனர்.
மேலும், வேலூர் திமுக பிரமுகரும், துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிங்ஸ்டன் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில் ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும், சொத்து ஆவணங்கள் மற்றும் பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கிங்ஸ்டன் கல்லூரியில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்திற்கு, சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று கதிர் ஆனந்த் நேரில் ஆஜராகி உள்ளார். கடந்த 3ஆம் தேதி முதல் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விளக்கம் அளித்து வருகிறார்.
முன்னதாக, கிங்ஸ்டன் கல்லூரி சர்வர் அறைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி கிங்ஸ்டன் கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications