600/600 எடுத்த நந்தினி.. சிலரே கோலோச்சும் படிப்பு! சிலிர்த்துப்போய் பாராட்டிய திமுக எம்பி அப்துல்லா
சென்னை: 12 ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ மாணவிகள் முன்பெல்லாம் மருத்துவர், பொறியாளர் ஆவேன் என்று கூறி வந்த நிலையில், 600 க்கு 600 மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி நந்தினி சொன்னதை கேட்டு திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா பாராட்டி இருக்கிறார். அப்படி எந்த துறையை அவர் தேர்வு செய்ய விரும்பினார்?
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டன. இதுவரை நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் மொத்த மதிப்பெண்களை விட 5 அல்லது 10 மதிப்பெண்கள் குறைவாக பெறுவது வழக்கம்.

ஆனால், இது வரை இல்லாத அளவுக்கு மாணவி திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி தமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று 600 க்கு 600 என முழு மதிப்பெண்களையும் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாணவி நந்தினி, "என் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. என்னால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்து நான் கவலைப்படவில்லை. கல்விதான் நமக்கு சொத்து என பெற்றோர் என்னிடம் சொல்லி வளர்த்தனர். நானும் அதை இடைவிடாமல் கடைபிடித்தேன். அதன் விளைவாகவே இவ்வளவு மதிப்பெண்களை என்னால் எடுக்க முடிந்தது.
நம்பிக்கையோடு முயற்சி செய்தால் அனைத்தையும் சாத்தியப்படுத்தலாம். ஆடிட்டராக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். சிஏ பயிற்சி எடுக்க உள்ளேன். அதற்கான மேல்படிப்புகளை படிக்க இருக்கிறேன்." என்றார். முழு மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா, மாணவி ஆடிட்டராக விரும்பியதை பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "முன்பெல்லாம் எங்கள் குழந்தைகள் டாக்டராவேன் இஞ்சீனியர் ஆவேன் என்றுதான் படித்தார்கள். எங்கள் குழந்தைகள் பெருவாரியாகப் பொறியியல் சென்ற பிறகு "தெருவுக்கு நாலு எஞ்சீனியரிங் காலேஜ்!! அதெல்லாம் ஒரு படிப்பா!?'' என தூற்றப்பட்டார்கள். அப்படியும் பொறியியலை ஆக்கிரமித்து இன்று உலகெங்கிலும் கொடி நாட்டுகின்றார்கள் எங்கள் பிள்ளைகள்!!
டாக்டருக்கு ஆசைப்படுற.. இரு உன் கனவை காலி செய்றேன்னு நீட் கொண்டு வந்து எம் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நசுக்கினார்கள். இனி அதற்கு முட்டுவதை விட செலவின்றி சிஏ படிக்க போவோம் என்று எம் பிள்ளைகள் சிஏ படிப்பின் மீது தங்கள் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.
நீட் வந்த பிறகு பெருவாரியான குழைந்தைகள் சிஏ படிக்கத் துவங்கி இருப்பதை கடந்த நான்கைந்து ஆண்டுகளாகப் பார்க்க முடிகிறது.
அப்படி ஒரு எங்கள் குழந்தைதான் இன்று 600/600 எடுத்து சாதனை படைத்துள்ளது. சிலர் மட்டுமே கோலோச்சும் ஆடிட்டர் துறை இனி முழுக்க முழுக்க எங்கள் பிள்ளைகளால் நிரம்பி வழியத் துவங்கும்! வாழ்த்துகள் மகளே." என்று பதிவிட்டு இருக்கிறார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications