அந்த நேர்மை புடிச்சிருக்கு.. “இத்துப்போன வந்தே பாரத்” - என்னை பாராட்டாதீங்க - திமுக எம்பி அப்துல்லா
சென்னை: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், இந்த ரயில் சேவைக்காக தான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் தன்னை பாராட்ட வேண்டாம் எனவும் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து ஏற்கனவே கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 24 ஆம் தேதி 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் குறிப்பாக திருநெல்வேலி - மதுரை - சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் சென்னை - ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் சேவையை யார் கொண்டு வந்தது என எம்பிகள், அரசியல் கட்சிகளிடையே சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தன்னை வந்தே பாரத் ரயிலுக்காக பாராட்ட வேண்டாம் என பேஸ்புக்கில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா பதிவிட்டு உள்ளார்.
அதில், "புதிய வந்தே பாரத் ரயிலுக்காக எனக்கு நன்றி தெரிவித்து எழுதி என்னை டேக் செய்துள்ளனர் சில நண்பர்கள். ரயில்வேத் துறைக்காக அதிகம் கோரிக்கைகள் வைத்து நாடாளுமன்றத்தில் பேசுபவன், கடிதங்கள் எழுதுபவன் என்பதால் வந்தே பாரத் ரயிலுக்கும் நான் முயற்சி செய்து இருப்பேன் என நினைத்து ஒருவேளை எனக்கு நன்றி தெரிவித்து இருக்கலாம்.
உண்மையில் வந்தே பாரத் ரயில் வந்ததற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்காக நான் நாடாளுமன்றத்தில் பேசியதும் இல்லை. அமைச்சர் ரயில்வே வாரியத் தலைவர் உள்ளிட்ட யாருக்கும் கடிதம் அனுப்பவும் இல்லை. வெகுஜன மக்கள் பயணிக்க முடியாத உயர் வகுப்பினருக்காக மட்டுமே இயக்கப்படும் ரயில் அது.
எனவே பெரும்பான்மையினருக்கு பயனில்லாத அந்த இத்துப்போன பாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நாளைக்கு அம்பானிக்கோ அதானிக்கோ சலுகை விலையில் விற்பதற்காக இன்றே ஓட்டப்படும் ஹைகிளாஸ் ரயில்தான் வந்தேபாரத்! நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த பேஸ்புக் பதிவை ட்விட்டரில் பகிர்ந்து உள்ள எம்.எம்.அப்துல்லா, "வெகுஜன மக்கள் பயணிக்க முடியாத உயர்வகுப்பினருக்காக மட்டுமே இயக்கப்படும் ரயில் அது.. எனவே பெரும்பான்மையினருக்கு பயனில்லாத அந்த இத்துப்போன பாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை." என்று குறிப்பிட்டு உள்ளார். புதுக்கோட்டை அப்துல்லாவின் இப்பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications