நீ எல்லாம் எப்படி எம்.பி ஆன? நாராயணனுக்கு ஆதரவாக வந்தவருக்கு கிண்டலாக பதில் கொடுத்த திமுக எம்.பி!
சென்னை : ட்விட்டரில் பாஜக நாராயணன், திமுக எம்.பி செந்தில் குமார் இடையே வார்த்தை மோதல் நடந்த நிலையில், பாஜக ஆதரவாளரின் கேள்விக்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார் செந்தில் குமார்.
"நீ எல்லாம் எப்படி எம்.பி ஆன?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார் பாஜக ஆதரவாளர் ஒருவர். அதற்கு, "மக்கள் ஓட்டு போட்டு" என்று ரிப்ளை கொடுத்திருக்கிறார் திமுக எம்.பி செந்தில் குமார்.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் எழுப்பி இருந்த கேள்விக்கு தருமபுரி எம்.பி செந்தில் குமார் பதில் அளித்தார். அதில் இருந்த எழுத்துப் பிழைகளை விமர்சித்திருந்தார் பாஜக நாராயணன்.
'ஏற்ப்பு' அல்ல ஏற்பு!
— Narayanan Thirupathy (@narayanantbjp) December 19, 2022
'புறியுதோ' அல்ல புரியுதோ!
என்ன செய்வது!! ஆங்கிலேய அடிவருடிகள், 'Google Translate' மூலம் தமிழ் கற்று கொண்டால் தமிழ் அறிவு வளராது தான்.
மீண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் படித்து விட்டு வரவும்.Union என்றால் என்ன? State என்றால் என்னவென்று கற்றுத் தருகிறேன். https://t.co/jwjlTrChMc
நாராயணன் ட்வீட்
டிசம்பர் 14ஆம் தேதி, உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டது தொடர்பாக விமர்சித்தார் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. "'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று அமைச்சராக உறுதி மொழி ஏற்று கொண்டவர் "ஒன்றிய அரசின்" சார்பாக என்று எந்த இடத்திலும் கூறாமல், இந்திய அரசு என்று உறுதி மொழி ஏற்று கொண்டது ஏன்? ஓ!! அப்படி குறிப்பிட்டிருந்தால் அமைச்சராகியிருக்க முடியாது அல்லது தகுதி இழக்க நேரிடும் என்று தெரியுமோ?" என ட்வீட் செய்திருந்தார் நாராயணன்.

பதவியேற்பு உறுதிமொழி
திமுக கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது முதலே, மத்தியில் ஆளும் பாஜக அரசை குறிப்பிட 'ஒன்றிய அரசு' என்ற பிரயேகத்தைப் பயன்படுத்தி வருகிறது. முன்பு மத்திய அரசு எனப் பயன்படுத்தி வந்த நிலையில், ஆங்கிலத்தில் இருக்கும் Union Government என்பதனை ஒன்றிய அரசு என்பதாகக் குறிப்பிட்டு வருகின்றனர் திமுகவினர். இதற்கு பாஜகவினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், பாஜகவின் நாராயணன் திருப்பதி உதயநிதி பதவியேற்பு உறுதிமொழி எடுத்ததைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

யாருக்குமே அறிவு இருக்காதா?
நாராயணன் திருப்பதியின் இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார், "பாஜகவில் யாருக்குமே அறிவு இருக்காதா?
சரி மூன்றாம் வகுப்பு கிளாஸ் எடுப்போம்
நாட்டின் பெயர்-இந்தியா
மாநிலத்தின் பெயர்-தமிழ் நாடு
Union Govt-ஒன்றிய அரசு
State Govt-மாநில அரசு
மிஸ்டர்.நாராயணா, நாட்டின் பெயரால் தான் பதவி ஏற்பு
புரியுதோ.. சரி, இப்போ திரும்ப சொல்லுங்க பார்க்கலாம்" என கிண்டல் செய்திருந்தார்.
பாஜக வில் யாருக்குமே அறிவு இருக்காதா 🤔
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 18, 2022
சரி மூன்றாம் வகுப்பு class எடுப்போம்
நாட்டின் பெயர்-இந்தியா
மாநிலத்தின் பெயர்-தமிழ் நாடு
Union Govt-ஒன்றிய அரசு
State Govt-மாநில அரசு
Mr.நாராயணா நாட்டின் பெயரால் தான் பதவி ஏற்ப்பு
புறியுதோ
சரி,
இப்போ திரும்ப சொல்லுங்க பார்க்கலாம் pic.twitter.com/tOi0GLBLoj
கற்று தருகிறேன்
அதற்கு நாராயணன் திருப்பதி, எம்.பி செந்தில்குமாரின் ட்வீட்டில் இருந்த எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டி 'ஏற்ப்பு' அல்ல ஏற்பு! 'புறியுதோ' அல்ல புரியுதோ! என்ன செய்வது!! ஆங்கிலேயே அடிவருடிகள், 'Google Translate' மூலம் தமிழ் கற்று கொண்டால் தமிழ் அறிவு வளராது தான். மீண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் படித்து விட்டு வரவும். Union என்றால் என்ன? State என்றால் என்னவென்று கற்றுத் தருகிறேன் எனக் கூறினார்.

அவரே தப்பா எழுதியிருக்கார்
இதுகுறித்து எம்.பி செந்தில் குமார், "நான் ஆங்கிலத்தில் படித்த போதும் தமிழில் சொந்தமாக கருத்துகளை எழுதி பதிவிட்டு வருகிறேன். இதனால் சில வார்த்தைகளில் தவறு வருவது இயல்பு. தமிழைத் தவறின்றி எழுத முயன்ற வருகிறேன், நான் எழுதும் தமிழில் குற்றம் கண்டுபிடித்திருக்கும் நாராயணன் திருப்பதி எழுதிய தமிழ் வார்த்தைகளிலும் சில தவறுகள் உள்ளன, இது அவருக்கும் தெரியும்" என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒட்டு போட்டு
இந்த விவகாரத்தில் ட்விட்டரில் பாஜக ஆதரவாளர் ஒருவர், "முதலில் தமிழ்ல ஒழுங்கா எழுது. பிறகு பாஜகவை பத்தி பேசலாம்.. நீ எல்லாம் எப்படி எம்.பி ஆன?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, "மக்கள் ஓட்டு போட்டு" என்று ரிப்ளை மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் திமுக எம்.பி செந்தில் குமார்.
-
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications