"நாளை சூரியன் உதித்ததும்".. சந்தோஷத்தில் பலர்.. பயத்தில் சிலர்.. யாரை சொல்கிறார் தருமபுரி எம்பி?
சென்னை: நாளை சூரியன் உதித்ததும் தேர்தலில் திமுக வெற்றி பெறும் செய்தியை அறிந்து சந்தோஷத்தில் பலர் இருப்பார்கள். அதே நேரத்தில் வழக்கு பயத்தில் சிலர் இருப்பார்கள் என தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். அவரை யாரை குறிப்பிடுகிறார் என தெரியவில்லை?
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் நாளை வெளியாகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கும்.
பெரும்பாலான கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என சொல்கிறார்கள். மற்ற கட்சிகள் கருத்துத் திணிப்புகள் என கூறி வருகின்றன.

நீட் தேர்வு
இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு, 8 வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அதிமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனால் 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சி அமைக்கும் என்ற குஷியில் தொண்டர்கள் உள்ளனர்.

திமுக எம்பி
இதுகுறித்து தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நாளை சூரியன் உதித்ததும் சந்தோஷத்தில் பலர் வழக்கு பயத்தில் சிலர் என குறிப்பிட்டுள்ளார். நாளை சூரியன் உதிப்பது என்றால் வாக்கு எண்ணிக்கை , அத்துடன் வாக்கு எண்ணிக்கை திமுக வெற்றியையும் சூரியன் உதிப்பது என்றுதான் உவமையாக சொல்வார்கள்.

மக்கள் விரோத திட்டங்கள்
சந்தோஷத்தில் யார் இருப்பார்கள்? திமுக தொண்டர்கள். 8 வழிச்சாலை திட்ட போராளிகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு, நீட் எதிர்ப்பாளர்கள், ஸ்டெர்லைட் போராளிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்தால் மேற்கண்ட மக்கள் விரோத திட்டங்களை திமுக அனுமதிக்காது என ஸ்டாலினே சொல்லியுள்ளார்.

கட்ட பஞ்சாயத்து
சரி வழக்கு பயத்தில் இருக்கும் சிலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. டெண்டர், கட்டபஞ்சாயத்து, ஊழல், லஞ்சம், மோசடி, முக்கியத் தலைவர்களின் மர்ம மரணம் உள்ளிட்டவைகளில் தொடர்புள்ளவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என ஸ்டாலின் கூறியதால் அவர்கள் எல்லாம் வழக்கு பயத்தில் இருப்பார்கள் என்ற அர்த்தத்தில் செந்தில்குமார் சொல்கிறார்.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications