நீதிபதி சுவாமிநாதன் பற்றி.. நாடாளுமன்றத்திலேயே டிஆர் பாலு சொன்ன வார்த்தை.. அல்லோகலமான அவை
சென்னை: நீதிபதி சுவாமிநாதன் குறித்தான எம்.பி. டி.ஆர். பாலுவின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார். நீதிபதி சுவாமிநாதன் பற்றிய டி.ஆர். பாலு கருத்துக்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை, மாநிலங்களவை அல்லோகலப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி திமுக கூட்டணி எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் செய்தனர். மாநிலங்களவையிலும் அமளி செய்தனர். ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க முடியாது என மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்த நிலையில், திமுக கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

நீதிபதி சுவாமிநாதன் விமர்சனம்
இதன் பின் மீண்டும் அவை கூடிய போது, தமிழ்நாட்டில் உள்நோக்கத்துடன் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். சபாநாயகர் இருக்கை அருகே சென்று திமுக மற்றும் கூட்டணி எம்பிக்கள் கடுமையாக கோஷம் எழுப்பினர்.
திமுக எம்.பி. டி.ஆர். பாலு அப்போது அவையில் நீதிபதி சுவாமிநாதனை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். நீதிபதி சுவாமிநாதன் பற்றிய டி.ஆர். பாலு கருத்துக்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரின் பேச்சை நீக்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எம்.பி. டி.ஆர். பாலுவின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார்.
எல் முருகன் பேச்சு
இதையடுத்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது.
மக்களின் அடிப்படை உரிமையை தடுக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். திமுக அரசு இதில் அரசியல் செய்கிறது என்று எல் முருகன் கடுமையாக விமர்சனம் வைத்தார். எல்.முருகனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது இருக்கைக்கு எதிரே சென்று திமுக எம்.பி.க்கள் முழக்கம் செய்தனர்.
வழக்கு பின்னணி
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால் தமிழக அரசு கோவிலில் விளக்கு ஏற்ற அனுமதிக்கவில்லை. இரண்டு முறை உத்தரவிட்டும் தமிழக அரசு ஏற்கவில்லை.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நீதிபதி சுவாமிநாதன் வழக்கு தொடுத்துள்ளார். இன்னொரு பக்கம் திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் 2014ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி நாங்கள் நடந்துகொள்கிறோம். எந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது . பாரம்பரியத்தின்படி நேற்று மலையில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு 2014ல் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக யாரும் தடை வாங்கவில்லை; மேல்முறையீடும் செய்யவில்லை. அப்படி இருக்கையில் இப்போது எப்படி தனி நீதிபதியின் உத்தரவை செயல்படுத்த முடியும்?
2014ல் இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த தீர்ப்பின்படி நாங்கள் நடக்கிறோம். எப்போதும் போல, அங்கு தீபம் ஏற்றப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று குறிப்பிட்டார்.
-
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மிஸ்ஸான க.பாளைம்.. ஆதரவு கோரிய அதிமுக வேட்பாளரிடம் அண்ணாமலை சொன்ன வார்த்தை.. யாருமே எதிர்பார்க்கலை -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே! -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி












Click it and Unblock the Notifications