டிஆர் பாலுவே இவ்வளவு சொல்லி விட்டார்.. அப்படின்னா.. கன்பார்ம் ஆயிடுச்சுன்னுதான் அர்த்தம்!
சென்னை: டிஆர் பாலுவே இவ்வளவு சொல்லி விட்டார், அப்படின்னா.. உதயநிதிக்கு புதிய பொறுப்பு கன்பார்ம் ஆயிடுச்சுன்னுதான் அர்த்தம் என்கிறார்கள் திமுக தொண்டர்கள்.
நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி மிக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டார். தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை திமுக நிர்வாகிகளிடையே எழுந்தது.

திருச்சி கூட்டத்தில் இதற்காக ஒரு தீர்மானமே போட்டுவிட்டார்கள். இதுபோலவே பல்வேறு மாவட்ட செயலாளர்கள் உதயநிதியை திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்குமாறு கட்சி தலைவர் ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்து வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், நேற்று, சென்னை போரூரில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டம் நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர். பாலு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது டிஆர் பாலு பேச ஆரம்பிக்கும்போதே, உதயநிதியை எக்கச்சக்கமாக புகழ்ந்து தள்ளிவிட்டார்.
"இயக்கத்தின் இளந்தென்றல்", "கழகத்தின் வருங்காலம்", "இயக்கத்தின் எதிர்காலம்" என்று அடைமொழி வைத்து பேசினார். அப்புறம் என்ன.. திமுகவின் மூத்த நிர்வாகியே, இயக்கத்தின் எதிர்காலம் என சொல்லிவிட்டதால், நிச்சயம் உதயநிதி முழு நேர அரசியலுக்கு வந்துவிடுவார் என்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள்!
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications