ஜூலை 16இல் திமுக எம்பிகள் கூட்டம்... பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: வரும் ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜூலை 16இல் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை 16இல் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 16-7-2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதுபோது, கழக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications