திமுக மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு
திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது.
சென்னை: திமுக நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னையில் நடந்த திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. திமுக கூட்டணிக்கு ஏற்கனவே 97 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், இப்போது வெற்றி பெற்ற இந்த 13 தொகுதிகளையும் சேர்த்து, 110-ஆக பலம் கூடியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதனால் நாடாளுமன்றமே திரும்பி பார்க்கும் அளவுக்கு திமுகவின் பலம் கூடி உள்ளது.
மக்களவை திமுக கொறடாவாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தேர்வு #DMK #MKStalin #ARaja pic.twitter.com/uVn9ergVjH
— Oneindia Tamil (@thatsTamil) May 25, 2019
இந்த நிலையில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்களின் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள்கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மற்றும் புதுச்சேரி வாக்காளர்களுக்கு நன்றிதெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.
மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு:
இக்கூட்டத்தில் மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை திமுக துணைத் தலைவராக கனிமொழி தேர்வானார். திமுக மக்களவை எம்.பிக்கள் குழுவின் கொறடாவாக ஆ. ராசா தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளராக எஸ்எஸ் பழனிமாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல, மாநிலங்களவை திமுக குழுத் தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டிகே.எஸ் இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications