3 மேட்டர்கள்.. ஒரே நாளில் பாஜகவை திணறடித்த "திமுக எம்பிக்கள்".. குலுங்கிய டெல்லி.. என்ன நடந்தது
மக்களவையில் இன்று திமுக எம்பிக்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்
சென்னை: இன்று ஒரே நாளில், திமுக எம்பிக்களால் டெல்லியே குலுங்கிவிட்டது.. அத்தனை கேள்விகளையும் கேட்டு மக்களவையை திணறடித்துவிட்டனர்.
கடந்த 10 நாட்களை கடந்த பெட்ரோல் விலை தொடர்ந்து நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்...
அலுவலகத்திற்காகவும், மற்றும் அத்தியாவசிய பணிக்காகவும் தினந்தோறும் செல்பவர்கள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்..

பாஜக அரசு
இந்நிலையில், நாடு முழுவதும் 60 கிலோமீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது... ஆனால் அந்தப் பணிகளை செய்வதற்குள் திடுதிப்பென்று சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி விட்டது.. அதன்படி, வாகன உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பை மீறி, 27 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

விவசாயிகள்
கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு, ஐந்து முதல் 10 ரூபாய் வரையும், சரக்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு 20 முதல் 30 ரூபாய் வரையும், 'கன்டெய்னர்' லாரிகள் உள்ளிட்டவற்றிற்கு, 30 முதல் 50 ரூபாய் வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விவசாய பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லும் நிலையில் அவர்களுக்கும் கட்டண உயர்வு அதிர்ச்சியளிக்கிறது.

தமிழச்சி தங்கபாண்டியன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது... அதனால், மத்திய அரசு உடனடியாக சுங்கக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. திமுக எம்பிக்களும் இந்த கோரிக்கையை கையில் எடுத்துள்ளனர்.. மக்களவையில் இன்று திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது சொன்னதாவது:

சுங்கச்சாவடி
சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 60 கிமீக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை என்று சொன்ன அவர், சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலேயே அடுத்த சுங்கச்சாவடி உள்ளது என்று சுட்டிக்காட்டினார்... மேலும், கோரையாறு ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்க மத்திய அரசு ரூ.800 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என திமுக எம்பி ஞானதிரவியம் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் விரோதம்
அதேபோல, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா மக்கள் விரோதமானது எனவும், கூட்டாட்சிக்கு எதிரானது என்று, திமுகவைச் சேர்ந்த, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் இன்று லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசியது அனலை கிளப்பியது.. எல்லாவற்றிற்கும் மேலாக, டி ஆர் பாலு, அதிரடியை கையில் எடுத்தார்..

டிஆர் பாலு
ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டு வந்திருக்கிறது.. சில தினங்களுக்கு முன்பு, ஆளுநரின் அதிகாரத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தனி நபர் தீர்மானத்தை திமுக எம்பி வில்சன் தாக்கல் செய்திருந்த நிலையில், டிஆர் பாலு இன்று இப்படி ஒரு ஷாக்கை பாஜகவுக்கு தந்துள்ளார்.. ஆக மொத்தம் ஒரே நாளில் டெல்லியை அதிர வைத்துவிட்டனர் நம் திமுக எம்பிக்கள்..!












Click it and Unblock the Notifications