ராகுல்காந்தி பதவி பறிப்பு! யாரோ கொடுத்த தவறான ஐடியா இது! 2 நாட்களில் எல்லாம் மாறும்! -ஆர்.எஸ்.பாரதி
சென்னை: யாரோ கொடுத்த தவறான ஆலோசனையின் பேரிலேயே ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறிக்கும் வகையில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இன்னும் 2 நாட்களில் முறைப்படி நீதிமன்றம் மூலம் தகுதிநீக்க அறிவிப்பை ராகுல் முறியடிப்பார் என சட்ட நுணுக்கங்களை குறிப்பிட்டு கூறுகிறார் ஆர்.எஸ்.பாரதி.

நாடு முழுவதும் அதிர்வலை
ராகுல் காந்தியின் எம்.பி.பதவியை பறிக்கும் வகையில் அவரை தகுதிநீக்கம் செய்வதாக மக்களவை செயலகம் அறிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாஜகவின் சர்வாதிகார போக்கை மக்கள் நன்கு அறிந்து கொண்டுவிட்டார்கள் என்றும் நிச்சயம் 2024 தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடக் கற்பிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

கவுண்டவுன் ஸ்டார்ட்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யவே சட்டத்தில் இடமில்லை என்றும் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் தான் தகுதி நீக்கம் செய்ய முடியும் எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் தண்டனையை நீதிமன்றமே நிறுத்தி வைத்துள்ள நிலையில் இவ்வளவு அவசரமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது யாரோ கொடுத்த தவறான ஆலோசனையின் பேரில் தான் இருக்கும் எனக் கூறினார். மத்திய பாஜக அரசு வீட்டுக்குச் செல்ல கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டதையே இந்த நிகழ்வு காட்டுகிறது என்றார்.

அரசியல் மாற்றம்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்ட நடைபயணம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக உளவுத்துறை மூலம் உணர்ந்த மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. ராகுலின் நடைபயணம் மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகுதி நீக்கம் சலசலப்பு இன்றோ நாளையோ முடிவுக்கு வந்துவிடும் என்றும் 2 நாட்களில் முறைப்படி நீதிமன்றம் மூலம் தகுதிநீக்க அறிவிப்பை ராகுல் முறியடிப்பார் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

ஓரணியில் எதிர்க்கட்சிகள்
ராகுல் காந்தி மீதான நடவடிக்கைகளால் அவர் மீதான இமேஜ் மக்கள் மத்தியில் உயர்ந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications