மேகதாது அணைக்கு எதிர்ப்பு.. திருச்சியில் டிச.4ல் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்.. ஸ்டாலின் பேட்டி
Recommended Video

சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் சார்பில் டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து, அடுத்த கட்ட பணிகளை துரிதப்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் குமாரசாமி தலைமையில் டிசம்பர் 6ம் தேதி உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக நலன் காப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசிக்க, இன்று காலை 10.30 மணி அளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
அதில் 9 தோழமை கட்சிகள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியதும் 2 நிமிடங்கள், கஜா புயலால் பாதித்த பகுதிகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக 2 நிமிடங்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினோம்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 4ம் தேதி திருச்சியில், அனைத்து கட்சிகள் போராட்டம் நடத்தலாம் என்று, இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எங்கள் தோழமை கட்சிகள் மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் இதில் பங்கேற்கலாம். நியாயப்படி டெல்டா மாவட்டங்களில்தான் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், டெல்டா மாவட்டங்களில், புயல் பாதிப்பு நிலவுவதால், திருச்சியில் போராட்டம் நடத்தி வருகிறோம்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications