திமுக பெயரை சொல்லி வசூலில் ஈடுபட்ட தசரதன்... மடக்கிப்பிடித்த பொதுமக்கள்
சென்னை: மாதவரத்தை சேர்ந்த தசரதன் திமுகவில் வட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். இவர் மாதவரம் பகுதியில் கட்சி பெயரைக் கூறி அடிக்கடி வசூல் வேட்டை நடத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார் எனக் கூறப்படுகிறது.
ரெட்டேரி வில்லிவாக்கம் சாலையில் ஸ்ரீ வாரி சூப்பர் மார்க்கெட் என்ற கடை இரண்டு வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கடை உரிமையாளரிடம் தனக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தால், எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக மிரட்டியுள்ளார். ஆனால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரோ அதையெல்லாம் நாங்க பார்த்துக்கொள்கிறோம் பணம் தர முடியாது என கறாராக கூறிவிட்டார்.

இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு ஸ்ரீவாரி சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற திமுக வட்டதுணைச் செயலாளர் தசரதன், தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்து அந்தக் கடைக்கு வெளியே பூக்கடை வைத்திருக்கும் முதியவர் தட்டிக்கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த தசரதன் அந்த முதியவரையும் கீழே தள்ளி சண்டையிட்டுள்ளார்.
மேலும், ஆபாச வார்த்தைகளால் அவர்களை திட்டியுள்ளார். இதனால் அங்கு கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் சொல்லிக்கொண்டிருக்கும் போதே தசரதன் தப்ப முயன்றுள்ளார். ஆனால், பொதுமக்கள் விடுவதாக இல்லை மடக்கிப்பிடித்தனர்.
திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதை உணர்ந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அடாவடி பேர்வழிகளை கட்சியில் இணைக்க தலைமை தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு சில நிர்வாகிகள் தான் இது போன்ற நபர்களை கட்சியில் இணைத்து களங்கம் ஏற்படுத்துவதாகவும் திமுகவினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications