சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டாக்டர் vs டாக்டர்.. தர்மபுரியில் களமிறங்கும் அன்புமணி.. திமுகவின் அதிரடி திட்டம் என்ன தெரியுமா?

லோக்சபா தேர்தலில் பாமக இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தர்மபுரி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களையும் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

    சென்னை: லோக்சபா தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தர்மபுரி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.

    லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள். அதிமுக, திமுக தனது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பாமகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பாமக சார்பாக 7 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது.

    கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்.. ஆளுநரிடம் கடிதம்! கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் காங்கிரஸ்.. ஆளுநரிடம் கடிதம்!

    அன்புமணி

    அன்புமணி

    லோக்சபா தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தர்மபுரி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். கடந்த லோக்சபா தேர்தலில் இவர் இதே தொகுதியில் போட்டியிட்டு இமாலய வெற்றிபெற்றார். தற்போது மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

    பாமக திட்டம்

    பாமக திட்டம்

    பாமக எந்த சீட்டை பெறாமல் போனாலும் இந்த ஒரு சீட்டை கண்டிப்பாக அதிமுக கூட்டணியில் பெறுவதில் உறுதியாக இருந்தது. தற்போது அதேபோல் தருமபுரி சீட்டை பெற்று அங்கு அன்புமணி போட்டியிட முடிவெடுத்து உள்ளார்.

    திமுக என்ன செய்கிறது

    திமுக என்ன செய்கிறது

    இங்கு திமுக சார்பாக டாக்டர்.எஸ் செந்தில் குமார் களமிறக்கப்படுகிறார். இது இரண்டு டாக்டர்களுக்கு இடையிலான தேர்தலாக இருக்க போகிறது. திமுக பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து இவரை களமிறக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    திமுக பிளான்

    திமுக பிளான்

    திமுகவின் திட்டம் இதுதான்,

    1. தர்மபுரியில் டாக்டர்.எஸ் செந்தில் குமார் குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே அதிக செல்வாக்கு கொண்டவர். வாக்குகளை அதிகம் பிரிப்பர்.

    2. உள்ளூர் அரசியல் தெரிந்த நபர்.

    3. அதே போல தர்மபுரியில் இருக்கும் தலித் மக்களின் வாக்குகளும் இவருக்கு கணிசமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    4. ஆனால் அன்புமணி ராமதாஸ் போல இவர் பெரிய பிரபலம் கிடையாது.

    5. தர்மபுரியில் பாமகவை வெல்வதற்காக இவர் கடந்த சில மாதங்களாகவே அரசியல் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பாமக வெல்லும்

    பாமக வெல்லும்

    பாமகவிற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளில் தர்மபுரியும் ஒன்று. அங்கு டாக்டர்.எஸ் செந்தில் குமாரை திமுக நிறுத்தியதற்கு இதுதான் காரணம் என்று கூறுகிறார்கள். இங்கு யார் வெற்றிபெற்றாலும், மிக சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    DMK places Doctor S Senthil Kumar against Dr.Anbumani in Dharmapuri constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X