நாடாளுமன்றத்தில் சம்பவம் செய்ய போகும் திமுக.. ஆக்சன் பிளானை வெளியிட்ட கனிமொழி
சென்னை: நாடே உற்று நோக்கிய பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் - பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துவிட்டது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கனிமொழி கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். இதனிடையே பீகாரை போலவே வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தவெக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திமுக எம்பிக்கள் கூட்டம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திமுக எம்பிக்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற திமுக தலைவரும், அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வருகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் எஸ்ஐஆர் பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி வரவில்லை. கல்விக்காக எஸ்எஸ்ஏ வழியாக வரவேண்டிய அந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு ஆயிரக்கணக்கான கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்ட தொடர்
அவற்றை வழங்க வேண்டும் என்று கோரவுள்ளோம். இந்தப் பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்ப முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நெல் ஈரப்பதத்தை ஏற்றுக்கொள்வதற்கு, ஈரப்பதம் விகிதத்தை அதிகப்படியாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஈரப்பதத்தை குறைவான விகிதத்தில் ஏற்பதால் மழைக்காலங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக ஒரு குழு அங்கு நேரடியாக ஆய்வு செய்து சென்றுள்ளனர். இருப்பினும் எந்த பதிலும் வரவில்லை. இதுதொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்திலும் நான் வலியுறுத்தியுள்ளேன். அந்தப் பிரச்சனையையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
எஸ்ஐஆர், மெட்ரோ
தமிழ்நாட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனயையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டுள்ளோம். இப்படி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். எஸ்ஐஆர் என்பது அடிப்படையில் அடித்தட்டு மக்கள் பிஎல்ஓக்கள் மீது அக்கறை, மனிதாபிமானம் இல்லாமல் திணிக்கும் திட்டம்.
பல மாநிலங்களில் பிஎல்ஓக்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக குறைவான காலத்தில் இந்தப் பணிகளை முடிக்க சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் போராட்டத்துடன் தான் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
மழை காலத்தில் மக்களை பாதுகாக்கும் பணி அதிகாரிகளுக்கு உள்ளது. அந்தப் பணிகளை விட்டு அதிகாரிகள் எஸ்ஐஆர் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இது மக்களைப் பற்றி அக்கறையே இல்லாமல் போதிய அவகாசம் தாராமல், குறுகிய காலத்தில் செய்து முடிக்க சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. "என்றார்.
-
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications