ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, திமுக தலைமை தீவிர சுயபரிசோதனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்பு கள ஆய்வு குழுவின் அறிக்கை தற்போது அறிவாலயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறுநில மன்னர்கள் போல் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் செயல்பட்டதாக தலைமைக்கு புகார் எழுந்த நிலையில், ஆக்சனுக்கு தயாராகி வருகிறாராம் ஸ்டாலின்.
தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக வலுவான கட்சியாக இருந்து வந்த திமுக, இந்த முறை தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சியால் கடுமையான பின்னடைவை சந்தித்தது. குறிப்பாக, ஆட்சியை தக்கவைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையில் இருந்த திமுக தலைமைக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்தன.

இதையடுத்து, தோல்விக்கான காரணங்களை ஆழமாக ஆய்வு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த குழு வெறும் அலுவலக அறிக்கைகளை மட்டும் நம்பாமல், மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கட்சி நிர்வாகிகள், முன்னணி பொறுப்பாளர்கள், அடிமட்ட தொண்டர்களிடம் கருத்துக்களை சேகரித்தது.
திமுக
இந்த நிலையில் தான் அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது திமுக தலைமையை சிந்திக்க வைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆய்வில் வெளிவந்த முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் செயல்பாடுகள் தொடர்பானதாகும். தேர்தல் காலத்தில் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி பல இடங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் கட்சி பின்னடைவை சந்தித்ததாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றி கழகம்
தமிழக வெற்றி கழகம், இளம் வேட்பாளர்களை முன்னிறுத்திய நிலையில், திமுகவில் பழைய முகங்களே மீண்டும் வாய்ப்பு பெற்றதாகவும், புதிய தலைமுறைக்கு இடம் கிடைக்காததால் கட்சிக்குள் விரக்தி ஏற்பட்டதாகவும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தேர்தல் செலவுகளுக்காக தலைமையிலிருந்து வழங்கப்பட்ட நிதி முழுமையாக களப்பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சாதி
பல மாவட்டங்களில் தேர்தல் நிதி பயன்பாடு குறித்து தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், அதனால் களத்தில் எதிர்பார்த்த அளவிலான தேர்தல் பணிகள் நடைபெறவில்லை என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாவட்ட அளவிலான சில நிர்வாகிகள் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டதாகவும், சாதி மற்றும் குழு அடிப்படையிலான அணுகுமுறைகள் கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்ததாகவும் ஆய்வு குழுவிடம் புகார்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைமை
தேர்தல் காலத்தில் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், சிலர் நேரடியாகவே தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. "கட்சிக்காக செலவு செய்தோம், உழைத்தோம்; ஆனால் எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்ற உணர்வு பல இடங்களில் காணப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
முக ஸ்டாலின்
குறிப்பாக, மாவட்ட மற்றும் மாநில அளவிலான பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சிக்குள் நிலவி வருகிறது. கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்து தலைமை மட்டத்திலும் வலுப்பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், அடிமட்ட தொண்டர்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து, கட்சியின் கட்டமைப்பை புதுப்பிக்கும் முயற்சியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இறங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் தோல்வி
தேர்தல் தோல்வி அளித்த பாடங்களை அடிப்படையாக கொண்டு, கட்சிக்குள் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், பல ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சீனியர் நிர்வாகிகளின் அதிகாரம் குறைக்கப்படும், புதிய தலைமுறைக்கு அதிக இடம் வழங்கப்படும் போன்ற தகவல்கள் கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications