லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் திமுக.. கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு.. இணைந்த மேயர் பிரியா
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு திமுக நான்கு கால் பாய்ச்சலில் தயாராகி வருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அபரிமிதமான வெற்றி பெற்றது திமுக காங்கிரஸ் கட்சி கூட்டணி. இந்த முறை வரும் மே மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்யணம் செய்து வியூகம் வகுத்துள்ளது.
ஒரு கட்சியின் வெற்றிக்கு தேர்தல் அறிக்கை மிக முக்கியமானது. இந்த ஆண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தல் - 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:
தலைமை: கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்) திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்)
திரு. ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்)
மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்)
மாண்புமிகு டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்)

மாண்புமிகு கோவி.செழியன் ( வர்த்தகர் அணி துணைத் தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி,சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., கழக மாணவரணிச் செயலாளர், எம்.எம்.அப்துல்லா எம்.பி., ( அயலக அணிச் செயலாளர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மருத்துவ அணிச் செயலாளர், மாண்புமிகு மேயர் பிரியா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
திமுகவில் எந்த பொறுப்பிலும் இதுவரை மேயர் பிரியா நியமிக்கப்படவில்லை. லோக்சபா தேர்தல் குழுவில் மூத்த நிர்வாகிகளுடன் இளைஞர்களுக்கும் அனுபவசாலிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதன்முறையாக இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளார் மேயர் பிரியா.












Click it and Unblock the Notifications