எப்படி, யாரிடமிருந்து வருதுன்னே தெரியலை..செல்லூர் ராஜூவிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்
கொரோனா நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக கூ
சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,765 ஆக இருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது.

எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவருமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளனர். திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருக்கிறார். அண்மையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. செல்லூர் ராஜூவின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா உறுதியானதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக செல்லூர் ராஜூவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செல்லூர் கே.ராஜூ அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் திமுக தலைவர் தனது ட்விட்டர் பதிவில் செல்லூர் ராஜூவிடம் நலம் விசாரித்தது பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிவில்,
Covid19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்! எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications