அக்.21-ம் தேதி கொங்கு மண்டல நிர்வாகிகளை நேரில் சந்திக்கிறார் ஸ்டாலின்... துரைமுருகன் அறிவிப்பு..!
சென்னை: கடந்த 6 மாதங்களாக காணொலி மூலம் திமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசி வந்த ஸ்டாலின், அக்டோபர் 21-ம் தேதியன்று கொங்கு மண்டல நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேசுகிறார்.
இது குறித்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அதில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.

அக்டோபர் 21-ம் தேதி அதாவது அடுத்த புதன்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டத்தில் திமுக வளர்ச்சிப் பணிகள் பற்றி ஸ்டாலின் நேரில் விவாதிப்பார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை திமுக சற்று வீக்காக உள்ளதால் வரும் தேர்தலில் இந்த மண்டலம் மீது அதீத கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ஸ்டாலின். அதிமுகவின் வாக்குவங்கியை திமுகவுக்கு ஈர்ப்பது குறித்து அக்டோபர் 21-ம் தேதி கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.
இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து ஸ்டாலின் பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு கொங்கு மண்டல திமுக நிர்வாகிகளை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications