வடநாட்டு சேட்டுக்கு சீட்? காங்.,க்கு கல்தா கொடுத்த அறிவாலயம்! ஒரே வார்த்தையில் டீலை முடித்த தலைகள்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது காங்கிரஸ். கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இரண்டு ராஜ்யசபா சீட்டுகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு, அதுவும் ஒரு சீட்டை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக திட்டவட்டமாக கூறியதாக சொல்கின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது. சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவடைந்து இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு பேச்சு நடத்தி இருக்கிறது.
வழக்கம்போல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூடுதல் சீட்டுகள் என காங்கிரஸ் பேசியதால் கடும் அதிர்ச்சியில் திமுக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் வென்றதால் இந்த முறை கூடுதல் தொகுதிகளை தர வேண்டும் என கேட்டதாம்.

ஆனால் கடந்த முறை போல 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் அதுவும் சில தொகுதிகளில் மாறி போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் திமுகவிடம் 2 ராஜ்யசபா சீட்டுகளை கேட்டு வலியுறுத்தியுள்ளது காங்கிரஸ் மேலிடம். ராஜ்யசபாவில் காங்கிரசுக்கான எதிர்க் கட்சி அந்தஸ்துக்கு சில இடங்கள் தேவைப்படுகிறதாம். அதனால், திமுகவிடம் 2 சீட்டுகளை எதிர் பார்க்கிறதாம் காங்கிரஸ் கட்சி.
ஆனால், வட மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்குத்தான் அந்த சீட்டை ஒதுக்குவீர்கள். வட மாநில காங்கிரஸ் காரர்கள் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாவதை திமுக விரும்ப வில்லை. அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை. அதனால் காங்கிரசுக்கு 1 சீட் ஒதுக்குகிறோம். அதுவும், அந்த 1 ராஜ்யசபா சீட்டும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்களில் இருந்து ஒருவருக்கு கொடுக்க வேண்டும்.
அந்த உறுதியைத் தந்தால்தான் 1 சீட்டும் ஒதுக்கப்படும். அப்படி தமிழக காங்கிரஸ் தலைவர் யாருக்கேனும் ஒதுக்கினால் எங்களுக்கு சந்தோசம். அதுவும் பீட்டர் அல்ஃபோன்ஸ் போன்ற சீனியர் காங்கிரஸ்காரராக இருந்தால் எங்களுக்கு கூடுதல் சந்தோசம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கே.சி.வேணு கோபாலிடம் அழுத்தமாக சொல்லிவிட்டராம். தற்போது இந்த தகவலும் காங்கிரஸ் மேலிடத்தில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
- சிறப்பு செய்தியாளர் எழில்
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications