நாகாலாந்து "நாய்க்கறி" சர்ச்சை கருத்து! ஆளுநர் ரவி விமர்சனத்திற்கு.. ஆர்எஸ் பாரதி தந்த பரபர விளக்கம்
சென்னை: நாகாலாந்து மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதியின் கருத்துகளை ஏற்க முடியாது என்று ஆளுநர் ரவி கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக ஆர்எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு நியமிக்கப்பட்டது முதலே இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது தொடர்ச்சியாக மோதல் ஏற்பட்டே வந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் கூட அரசு தயாரித்துக் கொடுத்த பேச்சில் சில வார்த்தைகளை அவர் தவிர்த்தது எல்லாம் புதிய சர்ச்சையைக் கிளப்பியது. இப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்தே வந்தது.
மோதல் போக்கு: மேலும், தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தர மறுப்பதாகவும் தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தற்போது மற்றொரு விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாடு ஆளுநர் ரவியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழ்நாடு அரசை ஆளுநர் ரவி வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகத் தெரிவித்த பாரதி, தொல்லை கொடுப்பதற்கென்றே ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆர் எஸ் பாரதி: தொடர்ந்து பேசிய ஆர் எஸ் பாரதி, "இதற்கு முன்பு ரவி ஆளுநராக இருந்த நாகாலாந்தில் அவருக்கு ஏற்பட்ட நிலை என்ன தெரியுமா? அவரை ஊரை விட்டே விரட்டியடித்தனர். நான் சொல்கிறேன் என நீங்கள் தப்பா நினைத்துக் கொள்ளக் கூடாது, இதை ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள்.. அவர்களே ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டிவிட்டார்கள்... அப்படியிருக்கும் போது உப்பு போட்டு திண்ணும் தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம்?" என ஆவேசம் காட்டினர்.
இந்தப் பேச்சு தான் சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், இதற்கு ஆளுநர் ரவி பதிலளித்திருந்தார். ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று குறிப்பிட்ட ஆளுநர் ரவி , "நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி 'நாய் கறி உண்பவர்கள்' எனப் பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தைக் காயப்படுத்தக் கூடாது என பாரதியை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
விளக்கம்: மேலும், பல்வேறு பாஜகவினரும் ஆர்எஸ் பாரதியின் இந்தக் கருத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சூழலில் ஆர்எஸ் பாரதி தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். ஆளுநர் தனது பேச்சைத் திசைதிருப்ப முயல்வதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நாகாலாந்து மக்களை நான் இழுவுப்படுத்தியதாக ஆளுநர் ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பது அவர்களின் கலாச்சாரம் என்பதனை Gauhati உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உறுதி செய்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications