ட்விட்டர் ஸ்பேஸில் எல்லை மீறிய RS பாரதி மகன் பேச்சு.. திமுகவை விட்டு நீக்கணும்.. கொந்தளிக்கும் பாஜக!
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் பேசிய எக்ஸ் ஸ்பேஸ் ஆடியோ பரவி வரும் நிலையில், அவரை திமுகவில் இருந்து நீக்க வேண்டும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளது தமிழக பாஜக.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு வீடுகளுக்குள் நீர் புகுந்தது. சில பகுதிகளில் 6 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத நிலை உள்ளது. மழைநீரோடு கழிவுநீர் கலந்து வீடுகளைச் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காக செலவு செய்யப்பட்ட 4000 கோடி ரூபாய் என்ன ஆனது என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். வெள்ள பாதிப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவரும் அரசை விமர்சனம் செய்திருந்தார். அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி-யுமான ஆர்எஸ் பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி, ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் 2015ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது தொடர்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ஒருமையில் பேசியுள்ளார் சாய் லட்சுமிகாந்த். மேலும், வெள்ள பாதிப்பு குறித்து திமுக அரசை விமர்சித்த பத்திரிகையாளருக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதியின் பேச்சுக்கு பாஜக மாநில துணைத் தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "எதை கொண்டு அடிப்பது? பரதேசிப்பயலே, உன்னையெல்லாம் நிம்மதியா வாழவே விடக்கூடாது பரதேசி நாயே, புறம்போக்கு பயலே' என்று சென்னை வெள்ள பாதிப்பு குறித்து அரசை விமர்சித்த ஊடகவியலாளர் குறித்து தரக் குறைவாக விமர்சித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி உள்ளிட்ட திமுக ஐடி விங் பிரிவை சார்ந்தவர்கள்.

அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் வாழவே விடக்கூடாது என்று சொல்வதா? மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஒருமையில் 'அந்த பொம்பளை' என்று விமர்சித்துள்ளது பெண் இனத்தையே கேவலப்படுத்தும், அவமானப்படுத்தும் செயல். இந்த 'ட்விட்டர் ஸ்பேஸ்' தளத்தில் பேசிய அனைவரின் மீதும் தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைவருக்குமான முதல்வர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகை சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை சற்றும் மதிப்பாரேயானால், இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை திமுகவில் இருந்து நீக்க வேண்டும். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்." என்றும் வலியுறுத்தியுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications