திமுகவில் இனி திருநங்கைகளும் உறுப்பினர்கள்.. கட்சி விதியில் மாற்றம்
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுவிக்க சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த திமுகவின் பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இறந்த எம்எல்ஏ, பரிதி இளம்வழுதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அது போல் சென்னையில் பேனர் சரிந்து விழுந்து பலியான சுபஸ்ரீக்கும் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த சுஜித்துக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் தொடங்கியதும் கருணாநிதி, அண்ணா உள்ளிட்டோர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிர்வாகிகளின் பொறுப்பு
இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர், முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி, டிஆர் பாலு, கனிமொழி, ஐ பெரியசாமி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க வேண்டும்.

திமுக பொதுக் குழு
திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, திமுக அமைப்புத் தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது, வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அருங்காட்சியகம்
இதை தவிர்த்து முக்கிய தீர்மானமாக கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைப்பது, தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தர மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் செய்யக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டாட்சி முறை
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில் கூட்டாட்சி அமைப்பு முறையை திமுக வலியுறுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைப்பதை ஏற்காது என்றார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications