2 வருடத்தில் முதல்முறை! கூட்டணி கட்சிகளே எதிர்த்த திமுக மசோதா! 12 மணி நேர பணி சட்டத்திற்கு எதிர்ப்பு
சென்னை: திமுக நிறைவேற்றிய மசோதாக்களை கடந்த இரண்டு வருடத்தில் அதன் கூட்டணி கட்சிகள் எதுவும் எதிர்க்காத நிலையில் முதல் முறையாக இன்று நிறைவேற்றப்பட்ட மசோதாவை கூட்டணி கட்சிகள் எதிர்த்து உள்ளன.
பெரும் எதிர்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு சட்டசபையில் 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்த சட்டத்தை கண்டித்து இடதுசாரி கட்சிகள், விசிக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது பணி நேரம் 8 மணி என்ற அளவில் உள்ளது. அதாவது எந்த வேலையாக இருந்தாலும் 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதைத்தான் 12 மணி நேரமாக மாற்றும் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
புதிய சட்டப்படி, 12 மணி நேரம் வேலை என்றாலும் 4 நாட்கள் மட்டுமே வேலை. 3 நாட்கள் விடுப்பு கொடுக்கப்படும்.
எதிர்ப்பு:
இந்த சட்ட மசோதாவை சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள், விசிக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
திமுக நிறைவேற்றிய மசோதாக்களை கடந்த இரண்டு வருடத்தில் அதன் கூட்டணி கட்சிகள் எதுவும் எதிர்க்காத நிலையில் முதல் முறையாக இன்றி நிறைவேற்றப்பட்ட மசோதாவை கூட்டணி கட்சிகள் எதிர்த்து உள்ளன.
கடந்த 2 வருடத்தில் எந்த சட்டத்தையும் திமுக கூட்டணி கட்சிகள் ஒன்றாக எதிர்க்கவில்லை. அவையில் இருந்தும் வெளிநடப்பு செய்யவில்லை.
இந்த சட்டத்தை காங்கிரஸ், மதிமுக, மமக, தவாக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
இன்று சட்டபையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி அளித்த பேட்டியில், தொழிற்சங்க உரிமையை நசுக்கும் சட்டம் பற்றி காலையிலேயே முதல்வர் சந்தித்து பேசினோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. முதல்வரை உறுதியளித்த பின்னரும் அடாவடியாக நிறைவேற்றம். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிறது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்த கண்டனத்தில், இந்தியாவில் முதன்முதலாக மேதினம் கொண்டாடிய தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலைக்கான சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் விருப்பப்பட்டு வேலை செய்வோருக்கு மட்டும் பொருந்த கூடிய என அமைச்சர் சொல்கிறார். அது என்ன விருப்பப்பட்டு சட்டம். இது தேவையில்லாத சட்டம், ஓவர் டைம் பார்ப்பதற்குத்தான் ஓவர் டைம் எனும் சட்டம் ஏற்கனவே இருக்கிறதே. அப்படி இருக்கும் போது இந்த சட்ட திருத்தம் ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications