மத்திய அரசு பணிந்ததன் பின்னணியில்... திமுகவுக்கு இவ்வளவு பங்கு உள்ளதா! இதோ முழு விவரம்!
சென்னை: 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ள நிலையில், அதன் பின்னணியில் திமுகவின் பங்களிப்பும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓராண்டு காலமாக விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி திமுக முன்னெடுத்த முயற்சிகளின் விவரத்தை அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பட்டியலிட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது போல் நீட் தேர்வையும் திரும்பப்பெற வைப்போம் என திமுக உறுதி கூறி வருகிறது.

கருப்புக்கொடி
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத கோவிந்த கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டங்களை வாபஸ் பெருமாறு வலியுறுத்தி 2020 டிசம்பர் 5-ம் தேதி திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதேபோல் 2020 டிசம்பர் 8-ம் தேதி விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்த பாரத் பந்துக்கும் திமுக ஆதரவவை நல்கியது.

பிரதமரிடம் கோரிக்கை
இதேபோல் 2020 டிசம்பர் 18-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியது. இதையடுத்து 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதிகள், 3 விவசாய சட்டங்களுக்கும் தற்காலிக தடை விதித்தனர். இது நேற்று கிடைத்த வெற்றிக்கான அடித்தளமாக இந்த விவகாரத்தில் பார்க்கப்படுகிறது.

பாரத் பந்த்
இதையடுத்து சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கிய திமுக, தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு கடந்த ஜூன் 17-ம் தேதி 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி பிரதமர் மோடியிடம் நேரடியாக வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி விவசாய சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

முக்கிய பங்கு
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி 3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெறக் கோரி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாரத் பந்தில் ஈடுபட்டது திமுக. இப்படி அடி மேல் அடி வைத்தால் பாறையும் உருகும் என்பதற்கேற்ப விவசாய சட்டங்களை திரும்பப்பெறும் விவகாரத்தில் திமுக தனது பங்களிப்பை செலுத்தியிருக்கிறது. உலக வரலாற்றில் உன்னத இடத்தை பிடித்த இந்திய விவசாயிகள் போராட்டத்தில் திமுகவுக்கு முக்கிய பங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications