"டேபிளுக்கு மேல பாருங்க.." ஸ்டாலினைவிட 16 அடி பாய்ந்த உதயநிதி! தொட்டதெல்லாம் துலங்கி, தொடர் வெற்றி
திமுக வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரமும் உதவியது
சென்னை: பிரச்சார களத்திற்கு உதயநிதி வந்தது முதல் திமுக தேர்தல்களில் வெற்றியை மட்டுமே பெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்க விஷயமாக உருமாறி உள்ளது.
உதயநிதிக்கு திமுகவில் போஸ்டிங் தந்தபோது, பல அதிருப்திகள் வெடித்தன.. சில சீனியர்கள் பொருமினார்கள்.. எதிர்க்கட்சிகளோ வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை முன்வைத்தது.
ஆனாலும், தன் பாணி அரசியலில் உதயநிதி ஸ்டாலின் தெளிவாகவே இருந்தார்.. கடந்த சட்டசபை தேர்தலிலும் சரி, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும் சரி, திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் எழுச்சியும், பிரச்சாரமும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

திமுக வெற்றி
இன்று பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றியை சுவைத்துள்ளது.. இத்தனைக்கும் இந்த முறை முதல்வர் ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்தில் இறங்கவில்லை.. இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மட்டும் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தார்.. எய்ம்ஸ் மதுரைக்கு இன்னும் வராதது குறித்து பக்கம் பக்கமாக ஸ்டாலின் அறிக்கைகள் வெளியிட்டாலும், ஒரே ஒரு செங்கல்லை தூக்கி காட்டி, பாஜகவை டேமேஜ் செய்துவிட்டார் உதயநிதி..

பெண்கள்
அதேபோலதான் இந்த முறையும், 2 விஷயங்கள் உதயநிதிக்கு கை கொடுத்துள்ளன.. ஒன்று, வழக்கமான அரசியல் லேங்குவேஜ்கள் இல்லாமல், கேஷூவலாக, வெகு இயல்பாக மக்களிடம் அவர் உரையாற்றிய பாங்குதான் அனைவரையும் ஈர்க்க வைத்தது... சில இடங்களில் பெண்களுக்கு 1000 ரூபாய் என்னாச்சு என்ற கேள்விகளை உதயநிதியிடம் பொதுமக்களே நேரடியாக கேட்டாலும் அதற்கும் விளக்கமாக பதில் தந்துவிட்டு போனார்.

சேலம்
எடப்பாடியின் மாவட்டமான சேலத்துக்கே சென்ற உதயநிதி, "சேலம் மக்களை எல்லாம் நம்ப முடியாது.. சட்டமன்ற தேர்தலில், இங்கே இருக்கிற 11 சட்டமன்ற தொகுதியில் திமுகவை நீங்க வெற்றி பெற வைத்தீர்களா? ஏமாத்திட்டீங்களே.. ஏன்? சரி, வரப்போகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலாவது வெற்றி பெற செய்யுங்கள்." என்று பேசியதுமே மக்கள் ஆரவாரம் செய்தனர்.

சாவுமணி
இதுபோலவே, எஸ்பி வேலுமணியின் கோட்டையான கோவையிலும் பேசினார் உதயநிதி.. "கோவை மாவட்ட மக்களே.. ஏமாத்திட்டீங்க.. ஆனால் திமுக தலைவர் பார்த்தீங்களா, ஸ்டாலின் சொன்னதை செய்துள்ளார்.. ஊழல்மணிக்கு சாவு மணி அடிச்சாச்சு என்றார்.. இதை கேட்டதும் மறுநாளே ஜெயக்குமார் கொந்தளித்தார்.. அதெப்படி, தங்கமணியை இவர் சாவுமணி என்று சொல்லலாம்? உதயநிதி எல்லை மீறி பேசுகிறார்? என்று ஆவேசமானார். மாஜிக்களை அந்த அளவுக்கு உதயநிதியின் பேச்சுக்கள் சூடேற்றிவிட்டன.

பரபரப்பு
எனினும், பெரிதும் பரபரப்புக்கு உள்ளானதும், சலசலப்பை ஏற்படுத்தியதும் எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனங்கள்தான்.. நீட் தேர்வுக்கு உதயநிதி என்ன சொன்னாரு? சொன்னதை செய்தாரா? நீட் தேர்வு ரகசியம் என்ன தெரியுமா? என்று ஒவ்வொரு ஊரிலும் எடப்பாடி பழனிசாமி சீரியஸாக பேசி கேள்வி எழுப்பி கொண்டிருந்தார்.. ஆனால், உதயநிதியோ, எடப்பாடிக்கு எல்லா இடத்திலும் கூல் பதிலையே தந்தார்.

முடக்கி பாருங்கள்
"பாஜக இருக்கிற தைரியத்தில்தானே இப்படியெல்லாம் பேசறார்? முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி பாருங்கள். அப்படி முடக்கப்பட்டால் மறுபடியும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.. தைரியம் இருந்தால் முடக்கி பார்க்கட்டும்.. நாங்கள் அதிமுகவை போல போல கூவத்தூருக்கு சென்று சசிகலாவின் காலை பிடித்து ஆட்சி அமைக்கவில்லை. மக்களை சந்தித்து அவர்களிடம் வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றோம்.

ரகசியம்
நீட் தேர்வு ரகசியம்ன்னு சொல்றாரே, அந்த ரகசியத்தை நான் இப்போது சொல்கிறேன். அது ஒன்னுமில்லை, அதிமுகவை போல நாங்க பாஜகவுக்கு அடிமையாக இல்லாமல், போராடி வெற்றி பெறுவோம்.. என்னை காணோம்னு ஊர் ஊரா சொல்லிட்டு வர்றார் எடப்பாடி.. சட்டசபையில் அவருக்கு எதிரே சீட்டில்தான் உட்கார்ந்திருந்தேன்.. அவர் டேபிளுக்கு மேலே பார்த்தால்தான் தெரிவேன். டேபிளுக்குக் கீழே பார்த்தால் எப்படி தெரிவேன்" என்பன போன்ற கிண்டல் பேச்சுக்கள் எல்லாம் எடப்பாடியை சீண்டி விடவே செய்தன.

ஜெயக்குமார் - கத்துக்குட்டி
முதிர்ந்த அரசியல் தலைவரை போல் இல்லாவிட்டாலும், மக்களை ஈர்க்கும் விதத்தில், திமுக தரப்பின் நியாயங்களை எடுத்து வைக்கும் அளவுக்கு உதயநிதியின் பேச்சுக்கள் இந்த தேர்தலில் வலு சேர்த்துள்ளதை மறுக்க முடியாது.. ஒருமுறை செய்தியாளர்கள் உதயநிதியிடம், ‛‛உங்களை ஜெயக்குமார் கத்துக்குட்டி என்கிறாரே'' என்று கேள்வி எழுப்பினர். ஆனால், உதயநிதி இதற்கு பதில்கூட சொல்லவில்லை.. கையெடுத்து கும்பிட்டு நக்கலாக சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பினார்..

கத்துக்குட்டி
இப்படி ஒரு பதிலை ஜெயக்குமார் உட்பட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. அதிமுகவை காரசாரமாக விமர்சிக்காமல், நக்கலாகவும், கிண்டலாகவும் பேசி மட்டுப்படுத்தி அரசியல் செய்வதும் ஒருவகை பிரச்சார யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.. எப்படி பார்த்தாலும், இந்த முறை திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் பிரச்சாரம் மூலகாரணமாக அமைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!












Click it and Unblock the Notifications