அதிமுககிட்ட 'அந்த' ஒரு கேள்வியை மட்டும் கேளுங்க. உதயநிதி 'பலே' பிரசாரம்.. அப்பாவை மிஞ்சிடுவார் போல
சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வாக்கு கேட்பதோடு இல்லாமல், ஸ்டாலினை போல சரமாரியாக எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.
Recommended Video
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தந்தை ஸ்டாலினை விட ஒருபடி மேலாக ஆக்ரோஷ மோடில் பிரசாரம் செய்து வருகிறார் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக வேட்பாளர் ஆர்.காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

நமது பணம்
அப்போது பேசிய உதயநிதி, "கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியை நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஓட, ஓட அடித்து விரட்டினீர்கள். அதனால், தமிழகம் மீது மோடிக்கு கோபம் உள்ளது. அந்த கோபத்தினால் தான் ஜிஎஸ்டி வரியில் மட்டும் தமிழகத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடியை வழங்கவில்லை. அது நமது பணம். கேட்டால் நிதி பற்றாக்குறை என்று சொல்கிறார்கள்.

தேவையா இது?
கொரோனா காலத்தில் பிரதமர் மோடி 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 2 சொகுசு விமானங்களை வாங்கியுள்ளார். ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும்போது, 10 ஆயிரம் கோடியில் ரூபாய் செலவில் புதிதாக ஒரு நாடாளுமன்ற கட்டிடம் கட்டுகிறார்கள்.

மறக்கக் கூடாது
'தமிழகத்தில் நீட் தேர்வை அறவே ரத்து செய்வேன்' என்று ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதைப் பார்த்து நீட் தேர்வை எதிர்ப்போம் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். மருத்துவ படிப்பிற்கு மட்டுமில்லை, நாம் அதிகம் படிக்கும் செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வு வைக்கிறார்கள். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை நாம் மறந்துவிடவே கூடாது.

அந்த கேள்வி
எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தமிழகத்தை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்கள். மறக்காமல் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். 20 நாள்தான் இருக்கிறது, அதிமுகவினர் உங்களிடம் வாக்கு கேட்க வருவார்கள்... அவர்களிடம் இந்த ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள்.. ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்று கேளுங்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார்.

அதை மட்டும் செய்யுங்கள்
திமுகவின் தேர்தல் அறிக்கையில், காஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.4 விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதுமட்டுமின்றி, பால் விலையும் 3 ரூபாய் குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படும். தமிழகத்துக்கு விடிவுகாலம் கிடைக்க திமுகவுக்கு மக்களாகிய நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications