"ரூட் கிளியர்".. பதவியே வேணாம்னு "அவர்" ஒதுங்க போறாராமே.. காரணம் செந்தில்பாலாஜியா?
மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்கிறாராம் எம்ஆர் விஜயபாஸ்கர்
சென்னை: பதவிக்காக எத்தனையோ பேர் மல்லுக்கட்டி கொண்டிருக்கும்போது, ஒரு முக்கிய புள்ளி, தனக்கு மாவட்ட செயலாளர் பதவியை வேண்டாம் என்று சொல்லி கொண்டிருக்கிறாராம்.. இவர் இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம் திமுகவின் அமைச்சர் செந்தில்பாலாஜிதானோ என்று யூகமாக சொல்லப்பட்டு வருகிறது..!
கரூர் தொகுதியில் எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, இங்கு யார் வெற்றி பெறுவது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரியதாகிவிடும்.
காரணம், இதே தொகுதியில்தான் அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அமைச்சரான செந்தில் பாலாஜியும் மோதிக் கொள்வார்கள்..

திமுக
இருவருமே தொகுதியில் பலம் வாய்ந்தவர்கள்.. இருவருமே பசை உள்ளவர்கள்.. இருவருமே கட்சிக்குள் செல்வாக்கு உள்ளவர்கள்.. இருவருக்குமே சாதி ஓட்டுக்கள் உள்ளன. அதனால், கரூரை யார் கைப்பற்றுவது என்பது ஒரு கவுரவ பிரச்சனையாகவே ஒவ்வொரு தேர்தலிலும் வெடிக்கும்... இதை அடிப்படையாக வைத்து, இரு தரப்பிலுமே உள்ளடி வேலைகளும் நடக்கும்.

ஹைலைட்
இதில் என்ன ஹைலைட் என்றால், செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்தபோதிருந்தே, இவர்கள் 2 பேருக்கும் ஆகாதாம்.. தொகுதிக்குள் ஆளுக்கொரு பக்கம் அரசியல் செய்வார்கள்.. இருவரின் மோதல் போக்குக்கு பின்னால் மூத்த அதிமுக எம்பி-யின் பெயரும் பலமாக அடிபட்டது என்பதெல்லாம் பழைய கதை..

அதிருப்தி
இப்போது திமுகவுக்கு செந்தில்பாலாஜி தாவியதும் இந்த அதிருப்தி மோதல் மேலும் அதிகமானது.. அதிலும் நடந்து முடிந்த 2 தேர்தல்களிலுமே செந்தில்பாலாஜி, எம்ஆர் விஜயபாஸ்கருக்கு சேலஞ்ச் செய்து களமிறங்கினார்... இறுதியில் இரண்டிலும் செந்தில்பாலாஜியே வெற்றி பெற்றார்.. திமுக ஏற்கனவே உறுதி அளித்திருந்தபடி அமைச்சர் பதவியும் தற்போது தந்து அழகுபார்த்துள்ளது.

மாவட்ட செயலாளர்
இதனால் எம்ஆர் விஜயபாஸ்கரால் தொடர்ந்து, கரூரில் தாக்கு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. அதனால் தன்னுடைய அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவெடுத்து விட்டாராம்.. இதற்கு என்ன காரணம்? ஒருவேளை செந்தில்பாலாஜியை சமாளிக்க முடியாமல், தொடர்ந்து மல்லுக்கட்ட முடியாமல், இருக்கின்ற செல்வாக்கோடு ஒதுங்க நினைக்கிறார் என்கிறது ஒரு தரப்பு.

செலவுகள்
ஆனால், மற்றொரு தரப்போ, மாவட்ட செயலாளர் என்றால் தொகுதியில் நிறைய செலவுகளை செய்ய வேண்டி வரும்.. அப்போதுதான் மாவட்டத்தை தன் பிடிக்குள் வைத்திருக்க முடியும்.. ஆனால், திமுக எப்படியும் 5 வருடங்கள், அல்லது 10 வருடங்கள்கூட ஆட்சியை தக்க வைக்கும்.. 10 வருடத்துக்கு மாவட்ட செயலராக இருந்து யார் செலவுகளை செய்வது? என்ற எண்ணமாககூட இருக்கலாம் என்கிறது மற்றொரு தரப்பு.

அதிமுக
தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.. இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.. ஆக, மொத்தம், எம்ஆர் விஜயபாஸ்கர் வழியாக விரைவில் ரூட் கிளியராகிறது..

விஜயபாஸ்கர்
அதேசமயம், அதிமுகவில், ஒருசில மாஜிக்கள் மீது மட்டும் ஊழல் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்காமல், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே திமுக தலைமைக்கு அழுத்தம் தந்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி.. அதுகுறித்து திமுக என்ன முடிவு எடுக்க போகிறது என்று தெரியவில்லை.. ஆனால், இப்போதைக்கு எம்ஆர் விஜயபாஸ்கரின் ரூட் கிளியராகிறது போலும்.. இன்னொரு விஜயபாஸ்கர் குறித்து இனிமேல்தான் தெரியவரும்..!
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications