திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது?
சென்னை: திமுக- காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. மார்ச் 3 ஆம் தேதியான இன்றைக்குள் முடிவெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு திமுக கெடு விதித்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவியுள்ளன. சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 5 அன்று முடிவடைகிறது. காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், திமுக தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கும் என மூத்த திமுக தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட அதே 25 சட்டமன்ற, ஒரு மாநிலங்களவைத் தொகுதியை காங்கிரஸுக்கு திமுக வழங்க முன்வந்துள்ளது.
ஆனால், காங்கிரஸ் தரப்பு 35-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளையும் (முதலில் 41, பிறகு 39 கோரப்பட்டது) இரண்டு மாநிலங்களவைத் தொகுதிகளையும் கேட்டு வருகிறது. மார்ச் 1 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "திமுகவின் இந்த தொகுதி பங்கீட்டை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார்.
முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நேர்மறையாக இருந்ததாக சோடங்கர் குறிப்பிட்டாலும், காங்கிரஸ் கோரிக்கைகளை திமுக ஏற்கும் என நம்பினார். "அப்போதுதான் எங்களால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த முடியும்," என்றார். இந்த முரண்பாடுகள் பேச்சுவார்த்தையை சிக்கலாக்கியுள்ளன.
25 சட்டசபைத் தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸுக்கு ஒதுக்க வாய்ப்பில்லை என திமுக தலைமை உறுதியாக உள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீது காங்கிரஸ் காட்டும் பரிவு திமுகவை உசுப்பேற்றியுள்ளது. இது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பதற்றத்தை நீடிக்கச் செய்கிறது.
இது குறித்து சோடங்கர் கூறுகையில், தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய கட்சி. அதை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுகிறார்கள். காங்கிரஸின் பலத்தையும், ராகுலின் முக்கியத்துவத்தையும் தமிழ்நாட்டில் அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்றார்.
ஆனாலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திமுக கவலைப்படவில்லை என மூத்த திமுக தலைவர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். திமுக ஏற்கெனவே வலுவான கூட்டணி அமைத்துவிட்டதாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
திருச்சியில் இந்த மாதம் நடைபெறவிருக்கும் திமுக மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்பு பற்றி கேட்டபோது, இது ஒரு கட்சி நிகழ்வு என திமுக தலைவர் பதிலளித்தார். "இவ்வாறான விஷயங்கள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகே பரிசீலிக்கப்படும்," என்றார்.
கேட்டது போல் 35 இடங்கள் கிடைக்காவிட்டால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. என்னதான் காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கொல்லைப்புறமாக பேச்சு நடத்தவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினாலும், தவெகவை ஆதரித்தும் புகழ்ந்தும் கிரீஷ் சோடங்கர் பேசுவது திமுகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி என காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் பேசி பிரச்சனையை கிளப்பிவிட்ட போதும் திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. எனினும் சோனியா காந்தி, ராகுலுக்காக திமுக தலைமை பொறுத்துக் கொண்டு பேச்சுவார்த்தையை நடத்தியது.
ஆனால் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடியே வாழ்த்துக்களை தெரிவித்த போதிலும் ராகுல் தாமதமாகத்தான் தெரிவித்தார். அதிலும் கடந்த முறை பிரதர் என குறிப்பிட்டிருந்த ராகுல், இந்த முறை "திரு. ஸ்டாலின்" என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுவே திமுக மீது காங்கிரஸ் தலைமைக்கு தொகுதி பங்கீட்டால் பிரச்சினை என்பது தெரியவந்தது.
இதனிடையே திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் பெரும்பாலானோர் திமுக கூட்டணியையே விரும்பியுள்ளனராம். எனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பது இன்று தெரியவரும்.
-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications