சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார்
சென்னை: மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கள்ளிக்குடியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு தேர்தல் வியூகங்கள் குறித்து எழுச்சியுரை ஆற்றினார். அப்போது திமுகவை பற்றி அவர் விமர்சித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக திமுகவின் உட்கட்சி பூசல்கள் மற்றும் கூட்டணி பலவீனம் குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆர்.பி. உதயகுமார் தன்னுடைய பேச்சில், "அதிமுகவிலிருந்து எத்தனை பேர் பிரிந்து சென்றாலும், இந்த இயக்கம் மீண்டும் மிகப்பெரிய வலிமையோடு எழுந்து நிற்கும். பதவிக்காகவோ அல்லது தனிப்பட்ட லாபத்திற்காகவோ ஓடுகிறவர்களை நம்பி இந்த இயக்கம் இல்லை.

சபரீசன் திமுக
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தனது கடைசி மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைக்கும் கிளைச் செயலாளர்களும் தொண்டர்களுமே அதிமுகவின் உண்மையான ஆணிவேர். பதவி சுகத்திற்காக செல்பவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இத்தனை பேரை அதிமுகவிலிருந்து இழுத்து சென்ற பிறகும், கட்சி இன்னும் இரும்புக்கோட்டையாக இருப்பதை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் விழிபிதுங்கி நிற்கிறார்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு இப்போது மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பணி நியமனம் மற்றும் பணி மாற்ற விவகாரங்களில் அமலாக்கத்துறை ஆதாரத்துடன் அவருக்குக் கடிதம் எழுதியுள்ளது.
கேஎன் நேருவுக்கு சிக்கல்
அமைச்சரவையில் தனக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் நேருவுக்கு இவ்வளவு பெரிய சிக்கல் வந்தும், முதலமைச்சர் இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்திக் கொடுத்த நேருவுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசாததால், அவர் மிகுந்த ஏமாற்றத்தோடு சென்றிருக்கிறார். முதலமைச்சர் தனக்கு ஆறுதல் சொல்வார் என்று அவர் எதிர்பார்த்தார், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
திமுக அரசு உண்மையில் வலிமையாக இருந்தால் எதற்கு அடுத்தடுத்து மாநாடுகளை நடத்த வேண்டும்? மகளிர் மாநாடு, இளைஞர் அணி மாநாடு என நடத்துவது உங்களின் நடுக்கத்தையே காட்டுகிறது. மக்கள் ஆதரவு இருந்தால் அவர்கள் தானாகவே வாக்களிப்பார்கள், இத்தனை ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை.
அஇஅதிமுக ஆர்பி உதயகுமார்
அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் எங்கள் கட்சியிலிருந்து சென்றவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு அமைச்சர் பதவி அல்ல, முதலமைச்சர் பதவியையே தூக்கிக் கொடுத்தாலும், அதிமுகவின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.
வரும் 2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையப்போவது உறுதி. தேர்தல் தோல்விக்கு பிறகு ஸ்டாலினை வீட்டில் உட்கார வைத்துவிட்டு, அவரது மருமகன் சபரீசன் திமுகவின் தலைமையைக் கைப்பற்றுவார் என்ற தகவல் வருகிறது. இது ஏற்கனவே ஆந்திராவில் நடந்த வரலாறு. அங்கே மாமனாரை ஓரங்கட்டிவிட்டு மருமகன் கட்சியைப் பிடித்தது போல, தமிழகத்திலும் அது நடப்பதற்கு வெகுநாட்கள் ஆகாது.
நீங்கள் அதிமுகவை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் சொந்தக் கட்சியைப் பறிகொடுத்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதிமுகவைப் பாதுகாக்க இரும்பு மனிதர் எடப்பாடியார் இருக்கிறார்.
ஆந்திரா ஸ்டைல் அரசியல்
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விரலை நீட்டி கேட்ட இடங்களையெல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த முறையை விட ஒரு தொகுதியிலாவது கூடுதலாகப் போட்டியிட திமுகவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?
உங்களை விட்டுப் போய்விடுவார்கள் என்ற பயத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு வாரி வழங்குகிறீர்கள். இது உங்கள் அரசியல் பலவீனத்தையே காட்டுகிறது. ஊடகங்கள் வாயிலாக நீங்கள் செய்யும் பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடாது. 2026-ல் மக்கள் உங்களுக்குச் சரியான பாடம் புகட்டுவார்கள், எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications