திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி! மாவட்ட நிர்வாகிகள் நியமனம் ஜரூர்! நேர்காணல் நடத்தும் தயாநிதி மாறன்
சென்னை: திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு மாவட்டந்தோறும் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகளில் தயாநிதி மாறன் எம்.பி. தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
திமுக வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் மாநில செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கான நிர்வாகிகளை மாவட்ட அளவில் நியமிப்பதற்கான நேர்காணலை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வருகிறார்.

திமுக வரலாற்றில்
திமுக வரலாற்றில் முதல்முறையாக அக்கட்சியின் சட்டத் திட்ட விதி 26 பிரிவு 1-ன் படி விளையாட்டு மேம்பாட்டு அணி என்ற புதிய சார்பு அணி கடந்த மாதம் உருவாக்கப்பட்டது. இந்த அணியின் முதல் மாநிலச் செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். மாநில துணைச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி, அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி, சேலம் எம்.பி. பார்த்திபன், ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தயாநிதிக்கு ஏமாற்றம்
திமுகவில் முக்கிய பதவியை எதிர்பார்த்த தயாநிதி மாறனுக்கு விளையாட்டு மேம்பாட்டு அணியில் பொறுப்பு வழங்கப்பட்டது ஏமாற்றத்தை அளித்தாலும் கூட, திமுகவில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு அணிக்கு முதல் மாநிலச் செயலாளர் என்பதால் அதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு காரியமாற்றத் தொடங்கியுள்ளார்.

புதிய நிர்வாகிகள்
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார். இதற்கான நேர்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வரும் தயாநிதி மாறன் நேர்காணலின் போது பல்வேறு கேள்விகளையும் முன் வைக்கிறார். நேர்காணலை நடத்தி முடித்தவுடன் இரண்டு மாதங்களுக்குள் புதிய நிர்வாகிகள் லிஸ்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்கள்
இதனிடையே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியில் இளைஞர்களை மட்டுமே அதிகளவில் நிர்வாகிகளாக நியமனம் செய்ய வேண்டும் என்பதில் தயாநிதி மாறன் எம்.பி. உறுதியாக இருக்கிறார். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஆண்டுதோறும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications