கனிமொழி இந்தி பேசுவார்.. நான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுகதான் காரணம்.. தமிழருவி மணியன் பளீர்!
சென்னை: நான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம், அவர்கள் வீட்டில் பலர் இந்தி பேசுவார்கள், ஆனால் என்னை போன்ற சாதாரண தமிழக மக்கள் இந்தி பேச முடியவில்லை என்று காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையில் திமுக எம்பி கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், அங்கு பணியிலிருந்த சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா? என்று எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக கனிமொழி கோபத்துடன் டிவிட் செய்து இருந்தார்.
கனிமொழியின் இந்த டிவிட் இணையத்தில் வைரலாகவே நாடு முழுக்க மீண்டும் இந்தி திணிப்பிற்கு எதிரான அதிர்வலைகள் எழுந்துள்ளது. தமிழகம் இந்திக்கு எதிராக கொதிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தனியார் செய்தி சேனலுக்கு இந்தி திணிப்பு தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

என்ன சொன்னார்
தமிழருவி மணியன் தனது பேட்டியில், எனக்கு என்னுடைய மொழிதான் முக்கியம். என்னுடைய தாய் மொழிதான் எனக்கு எப்போதும் முக்கியம். ஆனால் இந்தியா எனது தாய்நாடு. நான் எப்போதும் இந்தியன்தான். மொழி திணிப்பை ஏற்க முடியாது. என்னால் ஒரு தமிழனாகவும், ஒரு இந்தியனாகவும் இருக்க முடியும்.

மொழி தித்திப்பு
இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள கூடாது. இந்தி திணிப்பு என்று இல்லை, எந்த விதமான திணிப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள கூடாது. வலுக்கட்டாயமாக எதையும் ஒருவரிடம் திணிக்க கூடாது . நானும் கூட இந்தி திணிப்பிற்கு எதிராக பேசி இருக்கிறேன். போராடி இருக்கிறேன்.

திமுக எப்படி
நான் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக மட்டுமே காரணம். அவர்கள் வீட்டில் பலர் இந்தி பேசுவார்கள். ஆனால் என்னை போன்ற சாதாரண மனிதர்கள் இந்தி பேச முடியவில்லை. கனிமொழி நன்றாக இந்தி பேச கூடியவர். டெல்லி அரசியல் தலைவர்களிடம் இவர் இந்தியில் பேசி இருக்கிறார். கருணாநிதிக்கு இவர்தான் இந்தி உரைகளை மொழி பெயர்த்து கூறுவார்.

கனிமொழி எப்படி
ஆனால் எங்களால் இந்தி பேச முடியாமல் போனதற்கு திமுக செய்த அரசியல்தான் காரணம். திமுக இந்தி போராட்டம் நடத்தியது. இதனால் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உருவானது. இதனால் மக்கள் இந்தி படிப்பதை நிறுத்தினார்கள் . ஆனால கருணாநிதி வீட்டில் எல்லோரும் இந்தி படித்துவிட்டனர். நான் இந்தி படிக்க முடியாமல் போய்விட்டது.

அரசியல்
கனிமொழி அதிலும் இந்தி உரைகளை தமிழில் மொழிபெயர்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர். அவர்கள் வீட்டில் மட்டும் எல்லோரும் இந்தி பேசலாம். ஆனால் மக்கள் இந்தி பேச கூடாது என்று நினைக்கிறார்கள். டெல்லி தலைவர்கள் உடன் இவர்கள் நெருக்கமாக இருக்க இந்திதான் காரணம், என்று தமிழருவி மணியன் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications