Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவ வண்டில ஏத்து.. காங்கிரஸ் மேல வண்டிய ஏத்து! கண் சிவந்த ஸ்டாலின்! தூதுக்கு தயாரான டெல்லி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என காங்கிரஸ் நினைத்திருந்த நேரத்தில் மாஸ்டர் ஸ்ட்ரோக் அடித்திருக்கிறார் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினாலும் கவலை இல்லை என்ற நிலைக்கு திமுக வந்திருக்கும் நிலையில், டெல்லி தரப்பு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதை அடுத்து திமுகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் டெல்லி தலைமை ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத பல்வேறு திரைக்கதை திருப்பங்கள் இருக்கலாம் என்பதை சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. 20 ஆண்டுகள் ஆனபோதும் இதுவரை திமுகவுடன் கூட்டணி அமைக்காத தேமுதிக முதன் முறையாக கூட்டணியில் இணைந்து இருக்கிறது.

அதே நேரத்தில் எதிர்க் கட்சிகளுக்கு மட்டும் இல்லாமல், திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்குமே சிக்கல் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என பேசி வந்த காங்கிரசுக்கு மறைமுக மிரட்டல் விடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

DMK DMDK Congress

காங்கிரஸ் திமுக மோதல்

பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்த போதும் 2026 தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை மிகுந்த சத்தத்தோடு வைக்கிறது. அதற்கு காரணம் விஜய். தென் மாநிலங்களில் செல்வாக்கு கொண்ட நபராக விஜய் இருப்பதால் காங்கிரஸ் அவரை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது. அதே நேரத்தில் அவரை ஒரு காரணியாக பயன்படுத்தி திமுகவுடன் அதிக சீட்டுகளை கேட்டு பெறலாம் என்பதுதான் காங்கிரஸின் எண்ணம். அதற்கேற்றார் போல் திமுக தலைமையை வெறுப்பேற்றும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வந்தனர்.

மு க ஸ்டாலின்

அதே நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என முற்றுப்புள்ளி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன மு.க. ஸ்டாலின். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக தேமுதிக கூட்டணிக்கு அழைத்து வந்து எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் அல்ல கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். கடந்த தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிட்ட நிலையில் இந்த முறை அந்த தொகுதிகள் சற்று குறையும். காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்ட 25 தொகுதிகள் இருபதாக குறைக்கப்படலாம். சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கப்படலாம் என பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன.

தேமுதிக கூட்டணி

ஒருவேளை காங்கிரஸ் முரண்டு பிடித்தால் கூட்டணியில் இருந்து வெளியேற்றவும் திமுக தலைமை தயங்காது என்கின்றனர் நம்மிடம் பேசிய திமுகவினர். இந்த நிலையில் தங்கள் மீதான கோபத்தின் வெளிப்பாடு தான் தேமுதிகவின் கூட்டணி வருகை என உணர்ந்த டெல்லி காங்கிரஸ் தலைமை இது தொடர்பாக தமிழக தலைவர்களை தொடர்பு கொண்டு பேசியதாக சொல்லப்படுகிறது.

திமுக தலைமை

மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக தலைமை குறித்த ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூடுதல் தொகுதிகள் என்ற பேச்சையே எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாம். மேலும் விரைவில் டெல்லி தலைவர்கள் தமிழகம் வந்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசுவார்கள் எனவும் திமுக கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட தயாராக இருப்பதாக சொல்வார்கள் என்கின்றனர் திமுகவினர். தேமுதிக கூட்டணி அமைந்தது விசிக திருமா, வைகோ உள்ளிட்டவர்கள் வரவேற்ற நிலையில், காங்., இதுவரை கருத்து தெரிவிக்காததையும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+