அந்த 4 பேர் வேண்டாம்.. அனுப்பிடுங்க.. காங்கிரஸிடம் கறாராக சொன்ன திமுக.. ஸ்டாலினின் மாஸ்டர் முடிவு
சென்னை: கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வென்ற 4 தொகுதியில் இந்த முறை எம்பிக்களை மாற்ற வேண்டும் என்று திமுக காங்கிரஸிடம் கூறி உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.
அதேபோல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.
மதிமுக கூட்டணி: இது போக திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது . லோக்சபா தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று வைகோ அறிவித்துள்ளார். ஆனால் ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலின் முடிவு: இந்த நிலையில்தான் கூட்டணி கட்சிகளுக்கான எண்ணிக்கை உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் தொகுதிகள் தேர்வு செய்வது தொடர்பாக இந்த வாரத்துக்குள் முடிவெடுக்க தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். காங்கிரசைக் கூட சமாளித்துவிடலாம் போலிருக்கிறது ; மற்ற சில காட்சிகளை சமாளிக்க முடியவில்லை என ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்டிருக்கிறது பேச்சுவார்த்தைக்குழு.
இந்த நிலையில், தேர்தல் களத்தில் பல்வேறு வியூகங்களை செயல்படுத்த ரகசியமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது திமுக அரசு. உளவுத்துறை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையிலும், நெருக்கமான தனியார் அமைப்பின் மூலம் கொடுக்கப்படும் ஆலோசனைகள் அடிப்படையிலும் புது புது வியூகங்கள் திட்டமிடப்படுகின்றன.
இந்த நிலையில்தான் கைக்கு வந்த ரிப்போர்ட் அடிப்படையில் 4 தொகுதியில் எம்பிக்களை மாற்ற வேண்டும் என்று திமுக காங்கிரேஸிடம் கூறி உள்ளதாம். நீங்கள் 10 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்றால் இந்த 4 இடங்களில் வேட்பாளர்களை மாற்றுங்கள். ஏற்கனவே உள்ள எம்பிக்களை களமிறக்க வேண்டாம். அப்படி இறக்குவேன் என்றால் தொகுதிகளை மாற்றிக்கொள்ளுங்கள்.
அந்த எம்பிக்கள் அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் களமிறங்கினால் அவர்களின் வெற்றி வாய்ப்பு மிக குறைவு. அதனால் புதியவர்களை களமிறக்குங்கள் என்று திமுக சார்பில் கேட்டுள்ளதாம். இதில் சில சீனியர்கள் பெயர்கள் இருப்பதால் காங்கிரஸ் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications