Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டை கடித்து-மாட்டை கடித்து-மனிதனை கடித்த கதை! தமிழக மாணவர்கள் மீது கை வைத்த ஏபிவிபி! திமுக கண்டனம்

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி கடும் கண்டனம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல், ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக உள்ளது என திமுக மாணவரணியும், இளைஞரணியும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாணவர்கள் மீது இனவெறி கொண்டு, கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் டெல்லி காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக திமுக மாணவர் அணியும், திமுக இளைஞரணியும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாடு மாணவர்கள்

தமிழ்நாடு மாணவர்கள்

டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெ.என்.யூ) பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (ABVP) அமைப்பானது, நேற்று (20-02-2023) தமிழ் மாணவர்களின் மீது குறிவைத்து இனவெறி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தியைக் கண்டு தமிழ்நாடே கொந்தளித்து நிற்கிறது. டெல்லி காவல்துறை, இந்தக் கொடும் நடவடிக்கைகளுக்கு, கண்களை மூடிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதைக் கண்டு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

 ஆட்டைக்கடித்து -மாட்டைக் கடித்து

ஆட்டைக்கடித்து -மாட்டைக் கடித்து

ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகப் பொதுவுடமை கட்சியை சார்ந்த மாணவர்களை முதலில் தாக்கிய, பா.ஜ.க.-வின் ஏ.பி.வி.பி. அமைப்பு, இப்போது தமிழ்நாடு மாணவர்கள் மீது இனவெறி கொண்டு, கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜெ.என்.யூ-வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது, குண்டர்களை வைத்து ஏ.பி.வி.பி. அமைப்பு நடத்திய கொடுந்தாக்குதலை கண்டித்தும், காயமுற்ற ஜெ.என்.யூ மாணவர் அமைப்பின் தலைவர்களை கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையேற்று, கழக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியின் சார்பில் நாங்கள் கழக நிர்வாகிகளுடன் டெல்லி, ஜெ.என்.யூ-விற்கு சென்று, காயமுற்ற ஜெ.என்.யூ மாணவர் சங்க தலைவர்களை சந்தித்து ஆறுதல் கூறினோம்.

மாணவர் போர்வையில் குண்டர்கள்

மாணவர் போர்வையில் குண்டர்கள்

மேலும், ஜெ.என்.யூ மாணவர்களை, மாணவர் போர்வையில் வந்து தாக்கிய குண்டர்களையும், அவர்களை ஏவிவிட்ட ஏ.பி.வி.பி. அமைப்பினரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எங்களது கண்டன குரலை எழுப்பினோம்! அச்சம்பவத்தினால், ஜனநாயக மாண்பினை மதிக்கும் இந்திய அளவிலான அனைத்து மாணவர் அமைப்புகளும் வெகுண்டெழுந்து ஏ.பி.வி.பி.-விக்கு பெரும் கண்டனங்களை தெரிவித்ததை நாடறியும். தன்னுடைய கொடூர சர்வாதிகாரத்தில் கோலோச்சுகிற பா.ஜ.க. ஆட்சியின் தலைமையிடமாக விளங்கும் டெல்லி தலைமையிடத்திற்கே, தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் நிர்வாகிகளுடன் சென்று காயமுற்ற மாணவர்களுக்கு ஆறுதல் சொல்லி, கண்டனத்தை பதிவு செய்தது ஏ.பி.வி.பி.-க்கு பெரும் எதிர்வினை தந்தது.

ஜனநாய முற்போக்கு அமைப்புகள்

ஜனநாய முற்போக்கு அமைப்புகள்

அண்மையில் குஜராத் கலவரம் குறித்து பி.பி.சி. செய்தி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படத்தை திரையிட முயன்ற ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தின் மாணவர்களை தடுத்தி நிறுத்தி, பா.ஜ.க. அரசின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை பொதுவுடமை கட்சிகள் உட்பட தி.மு.க. மற்றும் பல்வேறு ஜனநாய முற்போக்கு அமைப்புகள் கண்டித்தது.

இனவெறி தாக்குதல்

இனவெறி தாக்குதல்

இந்நிலையில், ஜெ.என்.யூ. பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மீது இனவெறி தன்மையோடு, கொலைவெறி தாக்குதலை ஏ.பி.வி.பி. அமைப்பு நடத்தியுள்ளது. மேலும், சமூகநீதி, பெண்ணுரிமை, சாதி மறுப்பு, மதவெறி எதிர்ப்பு என்று சமூக சீர்த்திருத்தத்தை, சமத்துவத்தை ஏற்படுத்தி தந்திருக்கக்கூடிய தந்தை பெரியாரின் படத்தையும், பொதுவுடமை தலைவர்களின் உருவப்படங்களையும் உடைத்து தங்கள் மதவெறி, இனவெறி, இந்துத்துவா அரசியலை ஜெ.என்.யூ பல்கலைக் கழகத்தில் மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது ஏ.பி.வி.பி. அமைப்பு.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

உலகத்தில் எந்தஒரு மூலையிலும் தமிழர்களுக்கு ஒரு இடையூறு, இன்னல்ஏற்படுமாயின் அதனை கண்டித்தும், தமிழர்களுக்கு கை கொடுத்து உயர்த்தும்கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்ஆணையேற்று, கழக இளைஞர் அணியும், மாணவர் அணியும் ஒன்றிணைந்துபா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு, தமிழ் மாணவர்களின் மீது நடத்தியுள்ள கொடுந்தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது.

சிந்திய ஒவ்வொரு துளி ரத்தம்

சிந்திய ஒவ்வொரு துளி ரத்தம்

மாணவர்கள் மாறுபட்ட அரசியல் கருத்துகளுக்கு விவாதிப்பதும், கருத்தியல் போர் நடத்திட வேண்டுமென்பது அரசியல் மாண்பாகும். ஆனால், வெறுப்பு அரசியலையும், வெறிகொண்ட தாக்குதலையும் தன் சித்தாந்தமாய் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பு குண்டர்களாய், ரவுடிகளாய் மாறி டெல்லியில் பயிலும் தமிழ் மாணவர்களை தாக்கியிருப்பதற்கு அவர்கள் தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்பு கோர வேண்டும். தமிழ் மாணவர்கள் டெல்லியில் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும், பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

துணை நிற்கும்

துணை நிற்கும்

மேலும், விரைவில், டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரை பற்றிய கருத்தரங்கு பரப்புரையை தொடங்கவிருக்கிறோம்.
டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக் மாணவர்களை இனவெறியோடு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் மீது, பல்கலைக் கழக நிர்வாககமும், டெல்லி காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆதரவாய் களமாட தி.மு.க. இளைஞர் அணியும், மாணவர் அணியும் என்றென்றும் துணை நிற்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+